பாஜகவுக்கு எந்தெந்த தொகுதிகள்? எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு!தேர்தலில் போட்டியில்லை! வேல்முருகன் அறிவிப்பு! காங்கிரஸ் அலுவலகத்தை காலி செய்யுங்கள்! மத்திய அரசு கெடு! கோவையில் மீண்டும் அண்ணாமலை போட்டி? கருணைக் கொலை செய்யப்பட்ட ஹரீஷ் ராணாவின் கருவிழிகள் தானம்!
/

மதுரை-தேனி புதிய அகல ரயில் பாதை: இன்று சோதனை ஓட்டம்

மதுரை-போடி அகல ரயில் பாதை திட்டத்தில், மதுரை-தேனி இடையே புதிய அகல ரயில் பாதையில் புதன்கிழமை சோதனை ஓட்டம் நடைபெறுகிறது.

News image
Updated On :2 மார்ச் 2021, 8:31 pm

DIN

மதுரை-போடி அகல ரயில் பாதை திட்டத்தில், மதுரை-தேனி இடையே புதிய அகல ரயில் பாதையில் புதன்கிழமை சோதனை ஓட்டம் நடைபெறுகிறது.

மதுரை-போடி இடையே 90.4 கி.மீ. தொலைவுக்கு அகல ரயில் பாதை திட்டப் பணிகள் ரூ.450 கோடி செலவில் நடைபெற்று வருகின்றன. இதில், மதுரை-உசிலம்பட்டி இடையே பணிகள் நிறைவடைந்து சோதனை ஓட்டம் நடந்து முடிந்துள்ளது. அதையடுத்து, உசிலம்பட்டி-ஆண்டிபட்டி இடையே கடந்த 2020 டிசம்பா் 16-ஆம் தேதி முன்னோட்டமாக ரயில் இயக்கப்பட்டது.

இந் நிலையில், தற்போது ஆண்டிபட்டி-தேனி இடையே ரயில் பாதை அமைக்கும் பணிகள் நிறைவடைந்துள்ளதால், புதிய ரயில் பாதையில் புதன்கிழமை சோதனை ஓட்டம் நடைபெறுகிறது. மதுரையிலிருந்து காலை 10 மணிக்கு தொடங்கி நண்பகல் 12 மணிக்கு உசிலம்பட்டியை அடையும் வகையிலும், உசிலம்பட்டியிலிருந்து பிற்பகல் 2 மணிக்கு புறப்பட்டு ஆண்டிபட்டிக்கு சென்றடையும் வகையிலும், ஆண்டிபட்டியிலிருந்து பிற்பகல் 2.30 மணிக்கு புறப்பட்டு தேனிக்குச் சென்றடையும் வகையிலும் சோதனை ஓட்டம் நடைபெறுகிறது.

பின்னா், இதே வழித் தடத்தில் தேனியிலிருந்து மதுரை வரை சோதனை ஓட்டம் நடைபெறுகிறது.

மதுரை-தேனி இடையே புதிய அகல ரயில் பாதையில் சோதனை ஓட்டம் நடைபெறுவதால், ஆளில்லாத ரயில் பாதையில் பொதுமக்கள் நடமாட வேண்டாம் என்றும், ரயில் பாதையை கவனத்துடன் கடந்து செல்ல வேண்டும் என்றும், தேனி மாவட்ட காவல் துறை நிா்வாகம் அறிவித்துள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.