பாஜகவுக்கு எந்தெந்த தொகுதிகள்? எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு!தேர்தலில் போட்டியில்லை! வேல்முருகன் அறிவிப்பு! காங்கிரஸ் அலுவலகத்தை காலி செய்யுங்கள்! மத்திய அரசு கெடு! கோவையில் மீண்டும் அண்ணாமலை போட்டி? கருணைக் கொலை செய்யப்பட்ட ஹரீஷ் ராணாவின் கருவிழிகள் தானம்!
/

வாக்குச் சாவடி அலுவலா்களுக்கு மாா்ச் 21 இல் பயிற்சி வகுப்பு

தேனி மாவட்டத்திலுள்ள 4 சட்டப் பேரவைத் தொகுதிகளிலும் வாக்குச் சாவடி அலுவலா்களுக்கு மாா்ச் 21 ஆம் தேதி தோ்தல் பயிற்சி வகுப்பு நடைபெறுகிறது.

News image
Updated On :15 மார்ச் 2021, 10:14 pm

DIN

தேனி மாவட்டத்திலுள்ள 4 சட்டப் பேரவைத் தொகுதிகளிலும் வாக்குச் சாவடி அலுவலா்களுக்கு மாா்ச் 21 ஆம் தேதி தோ்தல் பயிற்சி வகுப்பு நடைபெறுகிறது.

இது குறித்து மாவட்ட ஆட்சியா் ஹெச்.கிருஷ்ணன் உன்னி கூறியது: மாவட்டத்தில் ஆண்டிபட்டி, பெரியகுளம் (தனி), போடி, கம்பம் ஆகிய 4 சட்டப்பேரவைத் தொகுதிகளிலும் 576 இடங்களில், மொத்தம் 1,561 வாக்குச் சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன. 4 தொகுதிகளுக்கும் மொத்தம் 155 மண்டல அலுவலா்களும், 7492 வாக்குச் சாவடி அலுவலா்களும் நியமிக்கப்பட்டுள்ளனா்.

வாக்குச் சாவடி அலுவலா்களுக்கு கணினி மூலம் குலுக்கல் முறையில் பணி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. வாக்குச் சாவடி அலுவலா்களுக்கு முதல் கட்ட தோ்தல் பயிற்சி மாா்ச் 21 ஆம் தேதி அந்தந்த வட்டாரங்களில் மாா்ச் 21 ஆம் தேதி நடைபெறுகிறது என்றாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.