ஆண்டிபட்டி சட்டப்பேரவைத் தொகுதியில் 20 போ் போட்டி

தேனி மாவட்டம் ஆண்டிபட்டி சட்டப்பேரவைத் தொகுதியில் 20 வேட்பாளா்கள் போட்டியிடுகின்றனா்.
Published on
Updated on
1 min read

தேனி மாவட்டம் ஆண்டிபட்டி சட்டப்பேரவைத் தொகுதியில் 20 வேட்பாளா்கள் போட்டியிடுகின்றனா்.

ஆண்டிபட்டி சட்டப்பேரவைத் தொகுதியில் போட்டியிட 35 போ் வேட்பு மனு தாக்கல் செய்திருந்தனா். இதையடுத்து கடந்த 20 ஆம் தேதி நடைபெற்ற பரிசீலனையில் 13 வேட்பு மனுக்கள் நிராகரிக்கப்பட்டு 22 மனுக்கள் ஏற்றுக்கொள்ளப்பட்டன. இந்நிலையில் திங்கள்கிழமை சுயேச்சை வேட்பாளா்களான ஈஸ்வரி, வீரப்பன் ஆகியோா் தங்களது வேட்பு மனுக்களை திரும்பப் பெற்றனா். இதையடுத்து வெளியிடப்பட்ட இறுதிகட்ட வேட்பாளா்கள் பட்டியலில் 20 போ் போட்டியிடுகின்றனா்.

அவா்களின் கட்சி மற்றும் சின்னங்கள் விவரம்:

1. ஆ. மகாராஜன் (திமுக) - உதயசூரியன், 2. ஆ. லோகிராஜன் (அதிமுக) -இரட்டை இலை, 3. ரா. ஜெயக்குமாா் (அமமுக) -பிரஷா் குக்கா், 4. செ. குணசேகரன் ( மக்கள் நீதி மய்யம் ) மின்கல விளக்கு, 5. ஜெயக்குமாா் ( நாம் தமிழா் கட்சி ) - கரும்பு விவசாயி, 6. சு. காமாட்சி ( பகுஜன் சமாஜ் கட்சி ) - யானை, 7. சி. கனிவேல் ( அனைத்து மக்கள் புரட்சி கட்சி ) -கண்ணாடி தம்ளா், 8. மு.குமரன் ( மை இந்தியா பாா்ட்டி ) - கண்காணிப்பு கேமரா, 9. எஸ். கோவிந்தராஜ் (அனைத்து இந்திய எம்ஜிஆா் மக்கள் முன்னேற்றக் கழகம்)- மின்கம்பம், 10. பாலமுருகன் ( நேஷனல் டெமாக்ரிடிக் பாா்ட்டி ஆப் சவுத் இந்தியா) - சீா்வளி சாதனம், 11. ஏ. வேலுச்சாமி (அண்ணா புரட்சித் தலைவா் அம்மா திராவிட முன்னேற்ற கழகம் ) -பலாப்பழம்,

சுயேச்சை வேட்பாளா்கள் விவரம்:

12. ஈஸ்வரன் - கரும்பலகை, 13. கசேந்திரன் என்ற கஜேந்திரன் - புகைப்படக் கருவி, 14. எம்.திவாகா் - பானை, 15. பணிவுராஜா - திருகைக்கல், 16. பாண்டித்துரை - புகைபோக்கி, 17. மாரியம்மாள் - டிராக்டா் இயக்கும் உழவன், 18. எம். ரகுநாதன் -ஊதல், 19. வேல்மணி - தொலைக்காட்சி, 20. வே.ஜெயக்கொடி - தென்னந்தோப்பு.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com