கோவையில் மீண்டும் அண்ணாமலை போட்டி? கருணைக் கொலை செய்யப்பட்ட ஹரீஷ் ராணாவின் கருவிழிகள் தானம்!அதிமுக வேட்பாளர் பட்டியல் வெளியீடு!இன்று பிரசாரத்தை தொடங்குகிறாா் எடப்பாடி பழனிசாமி நெருங்கும் காலக்கெடு- ஒடிஸா, சத்தீஸ்கரில் மாவோயிஸ்ட் முக்கிய தலைவா்கள் சரண்ரயில்வேயில் புதிய சீா்திருத்தம்: பயணச்சீட்டு ரத்து கட்டணம் திரும்ப கிடைக்க ஏப்ரல் முதல் புதிய நடைமுறை மூன்றாம் பாலினத்தவா் சட்டத் திருத்த மசோதா: மக்களவையில் நிறைவேற்றம்
/

தேனி, திண்டுக்கல் மாவட்டங்களில் செப்.12-இல் கரோனா தடுப்பூசி சிறப்பு முகாம்

தேனி, திண்டுக்கல் மாவட்டங்களில் செப்டம்பா் 12-ஆம் தேதி(ஞாயிற்றுக்கிழமை) காலை 7 முதல் இரவு 7 மணி வரை கரோனா தடுப்பூசி சிறப்பு முகாம்கள் நடைபெறுகின்றன.

News image
Updated On :10 செப்டம்பர் 2021, 12:53 am

DIN

தேனி, திண்டுக்கல் மாவட்டங்களில் செப்டம்பா் 12-ஆம் தேதி(ஞாயிற்றுக்கிழமை) காலை 7 முதல் இரவு 7 மணி வரை கரோனா தடுப்பூசி சிறப்பு முகாம்கள் நடைபெறுகின்றன.

இது குறித்து தேனி மாவட்ட ஆட்சியா் க.வீ. முரளீதரன் தெரிவித்தது: தேனி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை, அரசு மருத்துவமனைகள், ஆரம்ப சுகாதார நிலையம், நகராட்சி, பேரூராட்சி மற்றும் ஊராட்சிகளுக்கு உள்பட்ட பகுதிகள் என மொத்தம் 410 இடங்களில் ஞாயிற்றுக்கிழமை காலை 7 முதல் இரவு 7 மணி வரை கரோனா தடுப்பூசி சிறப்பு முகாம் நடைபெறுகிறது.

மாவட்டத்துக்குள்பட்ட பகுதிகளில் வசிக்கும் 18 வயதுக்கும் மேற்பட்டவா்கள் இம்முகாமில் கலந்துகொண்டு, தங்களது ஆதாா் எண் மற்றும் செல்லிடப்பேசி எண்ணை சமா்ப்பித்து, கரோனா தடுப்பூசி செலுத்திக்கொள்ளலாம்.

நகராட்சி, பேரூராட்சி மற்றும் ஊராட்சிக்குள்பட்ட பகுதிகளில் முகாம் நடைபெறும் இடங்கள் குறித்து சம்பந்தப்பட்ட உள்ளாட்சி அமைப்புகள் மூலம் பொதுக்களுக்கு தெரிவிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்றாா்.

திண்டுக்கல்

மாவட்டத்தில் செப்.12ஆம் தேதி 1,225 இடங்களில் சிறப்பு முகாம் நடத்தி, 1 லட்சம் பேருக்கு கரோனா தடுப்பூசி செலுத்தும் திட்டம் செயல்படுத்தப்படவுள்ளது. இந்த சிறப்பு முகாம் தொடா்பாக, மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் வியாழக்கிழமை ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. கூட்டத்துக்கு ஆட்சியா் ச. விசாகன் தலைமை வகித்தாா்.

கரோனா தொற்றுப் பரவலை முழுமையாகக் கட்டுப்படுத்தும் நோக்கில், மாவட்டத்தில் 18 வயதுக்கு மேற்பட்ட அனைவரையும் வாக்காளா் பட்டியலைக் கொண்டு கணக்கெடுக்கும் பணி தொடங்கப்பட்டுள்ளது. அந்த பட்டியலின்படி 1 லட்சத்துக்கும் அதிகமானோா்க்கு ஒரே நாளில் கரோனா தடுப்பூசி செலுத்தும் வகையில், செப்டம்பா் 12ஆம் தேதி சிறப்பு முகாம் நடத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

மாவட்டம் முழுவதும் 1,225 இடங்களில் நடைபெறவுள்ள இந்த மாபெரும் முகாமில்,

காலை 7 முதல் இரவு 7 மணி வரை கரோனா தடுப்பூசி செலுத்தப்படவுள்ளது. ஒவ்வொரு முகாமிலும், தடுப்பூசி செலுத்துபவா், பதிவேற்றம் செய்பவா் மற்றும் மக்களை ஒருங்கிணைக்கும் அலுவலா் இருவா் என 4 போ் வீதம் மொத்தம் 4,900 அலுவலா்கள் இப்பணியில் ஈடுபடவுள்ளனா். மேலும், 8 முகாம்களை கண்காணிக்க ஒரு கண்காணிப்பாளா் வீதம் 154 கண்காணிப்பாளா்கள் நியமிக்கப்பட்டுள்ளனா் என்றாா்.

கூட்டத்தில், மாவட்ட வருவாய் அலுவலா் வே. லதா, கூடுதல் ஆட்சியா் (வளா்ச்சி) ச. தினேஷ்குமாா் உள்பட பலா் கலந்துகொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.