கம்பம் சட்டப்பேரவை உறுப்பினர் அலுவலகம் முற்றுகை
By DIN | Published On : 02nd August 2021 03:11 PM | Last Updated : 02nd August 2021 03:11 PM | அ+அ அ- |

கம்பம் சட்டப்பேரவை உறுப்பினர் அலுவலகம் முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்ட சீர்மரபினர் நல சங்கத்தினர்.
தேனி மாவட்டத்தில் உள்ள கம்பம் தொகுதி சட்டப்பேரவை உறுப்பினர் அலுவலகத்தை சீர்மரபினர் நல சங்கத்தினர் திங்கள்கிழமை கருப்புக்கொடி ஏந்தி, முற்றுகையிட்டு ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
மாநில இளைஞரணி செயலாளர் ஜெயக்குமார் தலைமை தாங்கினார்.
நகர செயலாளர் காளீஸ்வரன், கவுதம், நகர தலைவர் விருமாண்டி ஆகியோர் முன்னிலை வகித்தனர். ஆர்பாட்டத்தில் ஒரு குறிப்பிட்ட சமூகத்தினருக்கு 10.5 சதவிகிதம் இட ஒதுக்கீடு சட்டத்தை அமல்படுத்தியதற்கும், டி.என்.டி மக்களின் ஒற்றை சான்றிதழ் கோரிக்கையை ஏற்க மறுக்கும் தமிழக அரசைக் கண்டித்தும் கோஷமிட்டனர்.
இதையும் படிக்கலாமே | கம்பம்: ஊராட்சி தலைவரை தகுதி நீக்கம் செய்யக் கோரி கவுன்சிலர்கள் முற்றுகை
மாநில வழக்கறிஞர் பிரிவு தலைவர் கெளதம் பேசும்போது, 2021ம் ஆண்டு மக்கள்தொகை கணக்கெடுப்பு மற்றும் சமூக பொருளாதார சாதி வாரி கணக்கெடுப்பில் இதர பிற்படுத்தப்பட்ட பிரிவினரையும் ( ஓ.பி.சி. ) சேர்க்க வேண்டும்.
2011 - ம் ஆண்டு சாதிவாரி கணக்கெடுப்பு விவரங்களை வெளியிட வேண்டும். கல்வி மற்றும் வேலைவாய்ப்பில் இடஒதுக்கீடு முறையை அமல்படுத்த வேண்டும் என்றார்.