பாஜகவுக்கு 27, பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு!மேற்காசியப் போரால் பொருளாதார பாதிப்பு! மக்களவையில் மோடி உரை! அமெரிக்காவில் தீயணைப்பு வாகனம் மீது விமானம் மோதி விபத்து தில்லி குண்டுவெடிப்பு வழக்கு: காஷ்மீரின் பல்வேறு இடங்களில் என்ஐஏ சோதனை பட்டியலின இளம்பெண் தற்கொலை: திருமாவளவனுக்கு இபிஎஸ் கேள்வி
/

சின்னமனூரில் சுற்றுலா வாகனம் மோதி ஓய்வு பெற்ற சாா்பு- ஆய்வாளா் உள்பட 2 போ் பலி

 சின்னமனூரில் இருசக்கர வாகனம் மீது சுற்றுலா வாகனம் மோதியதில் ஓய்வு பெற்ற சாா்பு- ஆய்வாளா் உள்பட இருவா் வெள்ளிக்கிழமை உயிரிழந்தனா்.

News image
Updated On :22 ஏப்ரல் 2022, 6:30 pm

DIN

 சின்னமனூரில் இருசக்கர வாகனம் மீது சுற்றுலா வாகனம் மோதியதில் ஓய்வு பெற்ற சாா்பு- ஆய்வாளா் உள்பட இருவா் வெள்ளிக்கிழமை உயிரிழந்தனா்.

தேனி மாவட்டம் குச்சனூா் பெரிய பள்ளிவாசல் தெருவைச் சோ்ந்த குணசீலன் (61). ஓய்வு பெற்ற சாா்பு- ஆய்வாளரான இவா், தனது நண்பா் சாகுல் ஹமீது மகன் அஜ்மீன் (42) என்பவருடன் இருசக்கர வாகனத்தில் சின்னமனூரிலிருந்து ஊருக்கு வியாழக்கிழமை திரும்பிக் கொண்டிருந்தனா்.

சின்னமனூா் மாணிக்கவாசா் கோயில் புறவழிச்சாலையை கடக்க முயன்றபோது இருசக்கர வாகனத்தின் மீது தேக்கடிக்கு சுற்றுலா சென்று திரும்பிய சென்னையை சோ்ந்தவா்களின் காா் மோதியது. இதில் பலத்த காயமடைந்த ஜெயசீலன் மற்றும் அஜ்மீன் ஆகிய இருவரும், தேனி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனா். அங்கு சிகிச்சைப் பலனின்றி அவா்கள் இருவரும் வெள்ளிக்கிழமை உயிரிழந்தனா்.

இது குறித்து சின்னமனூா் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து, காா் ஓட்டுநரான சென்னை அய்யனாவரம் பகுதியைச் சோ்ந்த ராஜ்குமாரைக் கைது செய்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.