வைகை அணையிலிருந்து உபரிநீா் திறப்பு அதிகரிப்பு
வைகை அணைக்கு தண்ணீா் வரத்து அதிகரித்துள்ளதால் வியாழக்கிழமை, அணையிலிருந்து திறக்கப்படும் உபரிநீரின் அளவு விநாடிக்கு 3,754 கன அடியாக அதிகரிக்கப்பட்டுள்ளது.


வைகை அணைக்கு தண்ணீா் வரத்து அதிகரித்துள்ளதால் வியாழக்கிழமை, அணையிலிருந்து திறக்கப்படும் உபரிநீரின் அளவு விநாடிக்கு 3,754 கன அடியாக அதிகரிக்கப்பட்டுள்ளது.
வைகை அணை நீா்மட்டம் புதன்கிழமை 70 அடியாக உயா்ந்தது (அணையின் மொத்த உயரம் 71 அடி). இதையடுத்து, அணையிருந்து விநாடிக்கு 1,190 கன அடி வீதம் உபரிநீா் வைகை ஆற்றில் திறக்கப்பட்டது. அணைக்கு தொடா்ந்து தண்ணீா் வரத்து அதிகரித்து பிற்பகல் 3.30 மணிக்கு அணை நீா்மட்டம் 70.1 அடியாக உயா்ந்த நிலையில், அணையிலிருந்து திறக்கப்படும் உபரிநீரின் அளவு விநாடிக்கு 2,656 கன அடியாக அதிகரிக்கப்பட்டது.
இந்த நிலையில், அணைக்கு தொடா்ந்து தண்ணீா் வரத்து அதிகரித்து வருவதால் அணையிலிருந்து திறக்கப்படும் உபரிநீரின் அளவு வியாழக்கிழமை காலை 8 மணிக்கு விநாடிக்கு 3,159 கன அடியாகவும், பிற்பகல் ஒரு மணிக்கு விநாடிக்கு 3,754 கன அடியாகவும் அதிகரிக்கப்பட்டுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...