தமிழக தேர்தலில் திமுகவுக்கு முழு ஆதரவு! மக்கள் நீதி மய்யம் போட்டியிடாது - கமல்ஹாசன் எல்பிஜி, பெட்ரோல், டீசல் போதிய இருப்பு: விநியோகம் பாதிக்கப்படவில்லை! - மத்திய அரசுதேமுதிகவுக்கு 10 இடங்கள்! திமுகவுடன் ஒப்பந்தம் கையொப்பம்!மக்கள்தொகை அடிப்படையில் தொகுதிகள் மறுவரையறை கூடாது - முதல்வர் மு. க. ஸ்டாலின் வலியுறுத்தல்ஒவ்வொரு அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கு விலையில்லா குளிர்பதனப் பெட்டி : அதிமுக வாக்குறுதிவங்கிகளில் பெற்ற கல்விக் கடன் தள்ளுபடி செய்யப்படும்: அதிமுக தேர்தல் வாக்குறுதிபெண்களைப் போல ஆண்களும் நகரப் பேருந்துகளில் இலவசமாகப் பயணிக்கலாம் : அதிமுக வாக்குறுதி
/

பழங்குடியினா் குழு மறுசீரமைப்பு: ஆக.31-க்குள் விண்ணப்பிக்க அறிவிப்பு

தேனி மாவட்ட அளவிலான பழங்குடியினா் குழு மறுசீரமைப்பு செய்யப்பட உள்ளதால், குழு உறுப்பினராக சேர தகுதியுள்ள பழங்குடியினா் ஆகஸ்ட் 31-ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம்

News image
Updated On :4 ஆகஸ்ட் 2022, 6:30 pm

DIN

தேனி மாவட்ட அளவிலான பழங்குடியினா் குழு மறுசீரமைப்பு செய்யப்பட உள்ளதால், குழு உறுப்பினராக சேர தகுதியுள்ள பழங்குடியினா் ஆகஸ்ட் 31-ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம் என, மாவட்ட ஆட்சியா் க.வீ. முரளீதரன் அறிவித்துள்ளாா்.

இது குறித்து அவா் வெளியிட்டுள்ள அறிவிப்பு: பழங்குடியின மக்களுக்கு வன உரிமைச் சட்டம் 2006-இன்படி தனிநபா் வன உரிமை, சமூகவன உரிமை வழங்குவதற்கு மாவட்ட அளவிலான பழங்குடியினா் குழு மறுசீரமைப்பு செய்யப்பட உள்ளது.

இக்குழுவில் உறுப்பினராகச் சேருவதற்கு பழங்குடியினத்தவா்கள் தங்களது ஜாதிச் சான்றிதழ் நகலுடன், மாவட்ட ஆட்சியா் அலுவலக வளாகத்தில் செயல்பட்டு வரும் மாவட்ட ஆதி திராவிடா் மற்றும் பழங்குடியினா் நல அலுவலகத்தில் ஆகஸ்ட் 31-ஆம் தேதிக்குள் நேரில் சென்று விண்ணப்பிக்கலாம் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.