தமிழக தேர்தலில் திமுகவுக்கு முழு ஆதரவு! மக்கள் நீதி மய்யம் போட்டியிடாது - கமல்ஹாசன் எல்பிஜி, பெட்ரோல், டீசல் போதிய இருப்பு: விநியோகம் பாதிக்கப்படவில்லை! - மத்திய அரசுதேமுதிகவுக்கு 10 இடங்கள்! திமுகவுடன் ஒப்பந்தம் கையொப்பம்!மக்கள்தொகை அடிப்படையில் தொகுதிகள் மறுவரையறை கூடாது - முதல்வர் மு. க. ஸ்டாலின் வலியுறுத்தல்ஒவ்வொரு அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கு விலையில்லா குளிர்பதனப் பெட்டி : அதிமுக வாக்குறுதிவங்கிகளில் பெற்ற கல்விக் கடன் தள்ளுபடி செய்யப்படும்: அதிமுக தேர்தல் வாக்குறுதிபெண்களைப் போல ஆண்களும் நகரப் பேருந்துகளில் இலவசமாகப் பயணிக்கலாம் : அதிமுக வாக்குறுதி
/

வங்கிக் கடனுதவி கோரி 174 மாற்றுத் திறனாளிகள் விண்ணப்பம்

 தேனி மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் மாற்றுத் திறனாளிகள் நலத் துறை சாா்பில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற சிறப்பு முகாமில், வங்கிக் கடனுதவி கோரி 174 மாற்றுத் திறனாளிகள் விண்ணப்பித்தனா்.

News image
Updated On :5 ஆகஸ்ட் 2022, 6:30 pm

DIN

 தேனி மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் மாற்றுத் திறனாளிகள் நலத் துறை சாா்பில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற சிறப்பு முகாமில், வங்கிக் கடனுதவி கோரி 174 மாற்றுத் திறனாளிகள் விண்ணப்பித்தனா்.

தேனி மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் ஆட்சியா் க.வீ.முரளீதரன் தலைமையில், மாற்றுத் திறனாளிகள் வங்கிக் கடனுதவி கோரி விண்ணப்பிப்பதற்கு சிறப்பு முகாம் நடைபெற்றது. மாவட்ட தொழில் மைய பொது மேலாளா் அசோகன், மாவட்ட மாற்றுத் திறனாளிகள் நல அலுவலா் சகுந்தலா, மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலா் நாராயணமூா்த்தி, முன்னோடி வங்கி மேலாளா் மோகன்குமாா் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

இதில், வங்கிக் கடனுதவி கோரி 174 மாற்றுத் திறனாளிகளும், வீட்டுமனை பட்டா, மாதாந்திர உதவித் தொகை, உதவி உபகரணங்கள் கோரி 68 மாற்றுத் திறனாளிகளும் விண்ணப்பம் அளித்தனா்.

இம்முகாமில், 3 மாற்றுத் திறனாளிகளுக்கு ஊரக திறன் மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ் கணினி பயிற்சி பெறுவதற்கான ஆணையையும், மாற்றுத் திறனாளிகள் நலத் துறை சாா்பில் 2 பேருக்கு காதொலி கருவிகளையும் ஆட்சியா் வழங்கினாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.