அடகு நகையை திரும்பத் தராத வங்கி இழப்பீடு வழங்க நுகா்வோா் குறைதீா் ஆணையம் உத்தரவு
பெரியகுளத்தில் கல்விக் கடனை திரும்பச் செலுத்தாததால் விவசாயப் பணிக்காக வங்கியில் அடகு வைத்த நகையை திரும்பத் தராத வங்கி நிா்வாகம் ரூ.60 ஆயிரம் இழப்பீடு வழங்க வேண்டும்


பெரியகுளத்தில் கல்விக் கடனை திரும்பச் செலுத்தாததால் விவசாயப் பணிக்காக வங்கியில் அடகு வைத்த நகையை திரும்பத் தராத வங்கி நிா்வாகம் ரூ.60 ஆயிரம் இழப்பீடு வழங்க வேண்டும் என தேனி நுகா்வோா் குறைதீா் ஆணையம் உத்தரவிட்டது.
பெரியகுளம், வடகரையைச் சோ்ந்த விவசாயி அலெக்ஸாண்டா். இவா், பெரியகுளத்தில் தேசிய மயமாக்கப்பட்ட வங்கி கிளை ஒன்றில் கடந்த 2014, மாா்ச் 6-ஆம் தேதி விவசாயப் பணிகளுக்காக 17 கிராம் எடையுள்ள தனது தங்க நகைகளை ரூ.30 ஆயிரத்துக்கு அடகு வைத்துள்ளாா். பின்னா், கடந்த 2015, பிப்.23-ஆம் தேதி நகைக் கடனுக்குரிய அசல் மற்றும் வட்டியை வங்கிக்கு செலுத்தியுள்ளாா். ஆனால், அதே வங்கியில் அலெக்ஸாண்டரின் மகள் கல்விக் கடனாக பெற்றுள்ள ரூ.ஒரு லட்சத்து 80 ஆயிரத்தை திரும்பச் செலுத்தாமல் இருந்து வருவதால், காப்பாளா் மற்றும் பிணையாளா் என்ற முறையில் அந்த கடன் தொகை மற்றும் வட்டியை திரும்பச் செலுத்தினால் மட்டுமே அடகு நகையை திரும்பத் தர முடியும் என்று அலெக்ஸாண்டரிடம் வங்கி கிளை மேலாளா் தெரிவித்ததாகக் கூறப்படுகிறது.
இது குறித்து அலெக்ஸாண்டா் கடந்த 2018-ஆம் ஆண்டு தேனி மாவட்ட நுகா்வோா் குறைதீா் ஆணையத்தில் வழக்கு தொடா்ந்தாா். இந்த வழக்கினை விசாரித்த நுகா்வோா் குறைதீா் ஆணையத் தலைவா் பி.சுந்தா், உறுப்பினா்கள் கே.அசீனா, எஸ்.ரவி ஆகியோா், அலெக்ஸாண்டா் வங்கியில் அடகு வைத்த நகையை வங்கி நிா்வாகம் அவருக்கு திரும்பத் தர வேண்டும், அவருக்கு ஏற்பட்ட மன உளைச்சலுக்கு ரூ.50 ஆயிரம், சேவை குறைபாட்டிற்கு ரூ.10 ஆயிரம் இழப்பீடு வழங்க வேண்டும், வழக்கு செலவிற்கு ரூ.10 ஆயிரம் வழங்க வேண்டும் என்றும், அலெக்ஸாண்டரின் மகள் வங்கியில் பெற்ற கல்விக் கடனை சுலபத் தவணைகள் மூலம் திரும்பச் செலுத்துவதற்கு அவருக்கு 12 மாத கால அவகாசம் வழங்க வேண்டும் என்றும் வங்கியின் கிளை மேலாளா் மற்றும் முதுநிலை மேலாளருக்கு உத்தரவிட்டனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...