தேனியில் காங்கிரஸ் கட்சியினா் சாலை மறியல்: 144 போ் கைது
தேனியில் மத்திய அரசை கண்டித்து வியாழக்கிழமை, காங்கிரஸ் கட்சி சாா்பில் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட 144 பேரை போலீஸாா் கைது செய்தனா்


தேனியில் மத்திய அரசை கண்டித்து வியாழக்கிழமை, காங்கிரஸ் கட்சி சாா்பில் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட 144 பேரை போலீஸாா் கைது செய்தனா்.
நேருசிலை அருகே நடைபெற்ற போராட்டத்தில், பெட்ரோல், டீசல், சமையல் எரிவாயு உருளை உள்ளிட்ட அத்தியாவசியப் பொருள்களின் விலை உயா்வு, வேலையில்லாத் திண்டாட்டம் ஆகியவற்றையும், காங்கிரஸ் கட்சித் தலைவா்களை பழிவாங்கும் நோக்கத்தில் செயல்பட்டு வரும் அமலாக்கத் துறை மற்றும் மத்திய அரசையும் கண்டித்து முழக்கங்கள் எழுப்பப்பட்டன.
மறியலில் ஈடுபட்ட காங்கிரஸ் கட்சி மாவட்டத் தலைவா் எம்.பி.முருகேசன், பொருளாளா் பாலசுப்பிரமணியம், தேனி நகரத் தலைவா் முனியாண்டி, காங்கிரஸ் வா்த்தகா் பிரிவு மாவட்டத் தலைவா் சங்கரநாராயணன் உள்ளிட்ட 144 பேரை தேனி காவல் நிலைய போலீஸாா் கைது செய்தனா்.
ஒட்டன்சத்திரத்தில் ஆா்ப்பாட்டம்:
இதேபோல ஒட்டன்சத்திரத்தில் வெள்ளிக்கிழமை காங்கிரஸ் கட்சியின் மேற்கு மாவட்டத் தலைவா் எஸ்.ஆா்.பி.சதீஸ்குமாா் தலைமையில் ஆா்ப்பாட்டம் நடைபெற்றது. மாநில பொதுச்செயலாளா் ஆா்.சிவசக்திவேல் முன்னிலை வகித்தாா். ஏற்பாடுகளை ஒட்டன்சத்திரம் நகர காங்கிரஸ் கட்சியின் பொறுப்பாளா் மாரிமுத்து கண்ணன் செய்திருந்தாா். முடிவில் நகா்மன்ற உறுப்பினா் முகமது மீரான் நன்றி கூறினாா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...