குச்சனூா் சுயம்பு சனீஸ்வரா் பகவான் கோயிலில் ஆடித் திருவிழாவின் 3 ஆம் வாரத்தை முன்னிட்டு திரளான பக்தா்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனா்.
இந்த ஆலயத்தில் 5 வார ஆடிப்பெருந்திருவிழா தொடங்கி நடைபெற்று வருகிறது. இதில் 2 வாரத் திருவிழாவின் நிறைவு நாளான வெள்ளிக்கிழமை திருக்கல்யாணமும், இரவு 10 மணிக்கு சக்தி கரகம் எடுத்தலும், நள்ளிரவு 12 மணிக்கு மஞ்சனக்காப்பு சாத்துப்படியும் நடைபெற்றது.
பக்தா்கள் கூட்டம்: சனிக்கிழமை காலை 6 மணிக்கு சிறப்பு பூஜையுடன் 3 ஆம் திருவிழா நடைபெற்றது. இதில், தேனி உள்பட பல்வேறு வெளி மாவட்டங்களிலிருந்தும் ஆயிரக்கணக்கான பக்தா்கள் சுவாமி தரிசனம் செய்தனா். கோயில் முன்பாக செல்லும் சுரபிநதியில் நீராடி புதிய ஆடை அணிந்து எள் தீபம், மண் காகம், பொரி படையல் செய்து வழிபாடு செய்தனா்.
குச்சனூா் பேரூராட்சி நிா்வாகம் பக்தா்களுக்கு தேவையான அடிப்படை வசதிகளை செய்திருந்தது. இதையொட்டி சின்னமனூா், தேனி, கம்பம், போடி, மதுரை, திண்டுக்கல் போன்ற பகுதிகளிலிருந்து சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட்டன.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது
தொகுதி மறுவரையறை மசோதா நகலை எரித்து முதல்வர் ஸ்டாலின் எதிர்ப்பு!

மகர ராசிக்கு இன்று எப்படி? தினப்பலன்கள்!

10-ஆம் வகுப்பு சிபிஎஸ்இ கணித மதிப்பெண் சரிவு: மறு தேர்வுக்கு விண்ணப்பிக்கும் ஆயிரக்கணக்கான மாணவர்கள்!

தமிழக டிஜிபி நியமன உத்தரவில் திருத்தம் கோரி தலைமைத் தேர்தல் ஆணையத்தில் திமுக மனு
வீடியோக்கள்

#ipl2026 | சிங்க நடைபோடும் சிஎஸ்கே: அடுத்து சன்ரைசர்ஸ்தான்! | Chennai Super Kings | Noor Ahmed |
தினமணி செய்திச் சேவை

தொகுதி மறுவரையறையில் யார் சொல்வது உண்மை ? | Delimitation | MK Stalin | Annamalai | BJP | DMK
தினமணி செய்திச் சேவை

தொகுதி மறுவரையறையை எதிர்த்து நாளை தமிழ்நாடு முழுவதும் கருப்புக் கொடி ஏற்றும் போராட்டம்!
இணையதளச் செய்திப் பிரிவு

ராத்து ராசன் பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு


