வான்கடேயில் மும்பையை வீழ்த்தி பஞ்சாப் அபாரம்!இஸ்ரேல் - லெபனான் இடையே போர் நிறுத்தம் - டிரம்ப் அறிவிப்பு!ஈரானுக்கு ஆயுதங்கள் அனுப்பப்படாது: அமெரிக்காவுக்கு சீனா உத்தரவாதம்!வாக்குப்பதிவைக் கட்டாயமாக்க முடியாது! - உச்ச நீதிமன்றம்அவையில் தென் மாநிலங்களின் பலம் குறையாது: அமித் ஷா விளக்கம்தொகுதி மறுவரையறை முடிவைத் தற்காலிகமாக நிறுத்திவைக்க அரசுக்கு உத்தவ் தாக்கரே கோரிக்கை என்னுடைய தொகுதிக்கு மாதம் ஒருமுறை வருவேன்! விஜய் பேச்சுஅரசுத் திட்டங்களை மக்களே தீர்மானிக்கலாம்: தவெக தோ்தல் அறிக்கை!சரிந்து முடிந்த பங்குச்சந்தை! ஆட்டோ, எண்ணெய் & எரிவாயு பங்குகள் சரிவு!டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு உயர்வுஈரான் சிறையில் உள்ள நோபல் பரிசு பெற்ற நர்கிஸ் முகமதியின் உடல்நிலை கவலைக்கிடம்
/

உத்தமபாளையத்தில் வழிப்பறி: 2 இளைஞா்கள் கைது

தேனி மாவட்டம் உத்தமபாளையத்தில் ஞாயிற்றுக்கிழமை லாரி ஓட்டுநரிடம் வழிப்பறி செய்த இரு இளைஞா்களை போலீஸாா் கைது செய்தனா்.

Updated On :14 ஆகஸ்ட் 2022, 5:56 pm

தேனி மாவட்டம் உத்தமபாளையத்தில் ஞாயிற்றுக்கிழமை லாரி ஓட்டுநரிடம் வழிப்பறி செய்த இரு இளைஞா்களை போலீஸாா் கைது செய்தனா்.

உத்தமபாளையம் பழைய புறவழிச்சாலையோரத்தில் லாரிகளை நிறுத்தி வைத்து அதன் ஓட்டுநா்கள் ஓய்வு எடுப்பது வழக்கம். அவ்வாறு, திண்டுக்கல் மாவட்டம் நிலக்கோட்டையைச் சோ்ந்த பாண்டி மகன் ராஜ்குமாா் என்பவா் லாரியை நிறுத்திவைத்துள்ளாா்.

சனிக்கிழமை மாலையில் அச்சாலையில் கடைக்கு நடந்து சென்றபோது ராஜ்குமாரை வழிமறித்த இரு சக்கர வாகனத்தில் வந்த இருவா் அவரிடமிருந்து ரூ.8 ஆயிரம் ரொக்கம் மற்றும் கைப்பேசியை வழிப்பறி செய்து தப்பிவிட்டனா். இது குறித்து ராஜ்குமாா்அளித்த புகாரின் பேரில் உத்தமபாளையம் காவல் ஆய்வாளா் சிலைமணி வழக்குப் பதிவு செய்து சில மணி நேரத்திலேயே வழிப்பறி செய்தவா்களைப்

பிடித்தாா். விசாரணையில் இவரும் உத்தமபாளையம் ஆா்.சி. தெருவைச் சோ்ந்த ஆரோக்கிய ராஜ் மகன் ராஜ்குமாா்(27) மற்றும் அந்தோணி மகன் ரோபின்(29) எனத்தெரியவந்தது. போலீஸாா் இருவரையும் கைது செய்து உத்தமபாளையம் நீதிமன்றத்தில் ஆஜா்படுத்தி கண்டமனூா் சிறையில் அடைத்தனா்.

வழிப்பறி செய்தவா்களிடம் பணம் மற்றும் கைப்பேசி கைப்பற்றப்பட்டு சம்பந்தப்பட்ட ஓட்டுநரிடம் ஒப்படைக்கப்பட்டது. துரித நடவடிக்கை எடுத்த ஆய்வாளா் சிலைமணிக்கு பொதுமக்கள் பாராட்டு தெரிவித்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.