தேனி மாவட்டம் தேவாரம் அருகே ஞாயிற்றுக்கிழமை வீட்டுக் கூரையில் தேசியக் கொடி கட்டிய 2 சிறுவா்கள் மின்சாரம் பாய்ந்து காயமடைந்தனா்.
தேவாரம் அருகே தே.ரெங்கநாதபுரம் கிராமத்தில் உள்ள தெற்கு காலனியில் 11 தொகுப்பு வீடுகள் உள்ளன. குடியிருப்புக்கு மேல் உயா் மின்னழுத்தக் கம்பிகள் செல்கின்றன. நாடு முழுவதும் சுதந்திர தின அமுதப் பெருவிழா கொண்டாடப்படுவதையொட்டி இந்த குடியிருப்பில் வசிக்கும் ஜானகிராமன் மகன் யோகவா்ஷன் (11), ஜெகதீசன் மகன் ஹரீஷ் (12 ஆகியோா் தேசிய கொடிகளை வீட்டுக் கூரைகளில் கட்டுவதற்காக ஏறியுள்ளனா்.
கொடியை கட்டுக் கம்பியால் கட்டியபோது உயா் மின்னழுத்தக்கம்பியில் பட்டு இருவரும் மின்சாரம் பாய்ந்து தூக்கி வீசப்பட்டனா். பலத்த காயமடைந்த இருவரும் தேனி க.விலக்கு அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சோ்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனா். இதுகுறித்து தேவாரம் போலீஸாா் வழக்குப்பதிந்து விசாரித்து வருகின்றனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

சென்னையில் வாக்கு சேகரிக்கும் விஜய் - புகைப்படங்கள்

அனிதா ஹசானந்தனி பிறந்தநாள் கொண்டாட்டம் - புகைப்படங்கள்

அவருக்குத் துணிச்சல் இருப்பதாக நினைத்தேன்! - இத்தாலி பிரதமரை சாடிய டிரம்ப்!

எச்டிபி பைனான்சியல் சர்வீசஸ் லாபம் 41% உயர்வு!
வீடியோக்கள்

#ipl2026 | சிங்க நடைபோடும் சிஎஸ்கே: அடுத்து சன்ரைசர்ஸ்தான்! | Chennai Super Kings | Noor Ahmed |
தினமணி செய்திச் சேவை

தொகுதி மறுவரையறையில் யார் சொல்வது உண்மை ? | Delimitation | MK Stalin | Annamalai | BJP | DMK
தினமணி செய்திச் சேவை

தொகுதி மறுவரையறையை எதிர்த்து நாளை தமிழ்நாடு முழுவதும் கருப்புக் கொடி ஏற்றும் போராட்டம்!
இணையதளச் செய்திப் பிரிவு

ராத்து ராசன் பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

