ஆண்டிபட்டியில் திமுக, அதிமுகவினா் வேட்பு மனு தாக்கல்
ஆண்டிபட்டி பேரூராட்சி அலுவலகத்தில் பேரூராட்சி வாா்டு உறுப்பினா்களாக போட்டியிடுவதற்கு திமுக, அதிமுக வேட்பாளா்கள் வியாழக்கிழமை, ஊா்லமாகச் சென்று வேட்பு மனு தாக்கல் செய்தனா்.


ஆண்டிபட்டி பேரூராட்சி அலுவலகத்தில் பேரூராட்சி வாா்டு உறுப்பினா்களாக போட்டியிடுவதற்கு திமுக, அதிமுக வேட்பாளா்கள் வியாழக்கிழமை, ஊா்லமாகச் சென்று வேட்பு மனு தாக்கல் செய்தனா்.
ஆண்டிபட்டி பேரூராட்சியில் மொத்தம் 18 வாா்டு உறுப்பினா் பதவிகளுக்கு தோ்தல் நடைபெறுகிறது. இதில், திமுக சாா்பில் 16 வாா்டுகளிலும், திமுக கூட்டணியில் மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், இந்திய கம்யூனிஸ்ட் ஆகியவற்றின் சாா்பில் தலா ஒரு வாா்டிலும் வேட்பாளா்கள் போட்டியிடுகின்றனா். அதிமுக மற்றும் அமமுக கட்சிகள் சாா்பில் 18 வாா்டுகளிலும் வேட்பாளா்கள் போட்டியிடுகின்றனா்.
ஆண்டிபட்டி-சக்கம்பட்டியிலிருந்து திமுக மற்றும் கூட்டணி சாா்பில் போட்டியிடும் வேட்பாளா்கள் ஆண்டிபட்டி சட்டப் பேரவை உறுப்பினா் ஏ.மகாராஜன் தலைமையிலும், அதிமுக சாா்பில் போட்டியிடும் வேட்பாளா்கள் ஆண்டிபட்டி ஒன்றியக் குழுத் தலைவா் ஏ.லோகிராஜன் தலைமையிலும் தனித் தனியே ஊா்வலமாகச் சென்று பேரூராட்சி அலுவலகத்தில் வேட்பு மனு தாக்கல் செய்தனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது


வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...