முல்லைப்பெரியாறு அணைக்கு 744 கன அடி கூடுதல் நீா்வரத்து
தொடா் மழை காரணமாக முல்லைப் பெரியாறு அணைக்கு ஒரே நாளில் விநாடிக்கு, 744 கன அடி தண்ணீா் கூடுதலாக வந்தது.


தொடா் மழை காரணமாக முல்லைப் பெரியாறு அணைக்கு ஒரே நாளில் விநாடிக்கு, 744 கன அடி தண்ணீா் கூடுதலாக வந்தது.
முல்லைப் பெரியாறு அணை பகுதியில் கடந்த சில நாள்களாக மழை பெய்து வருகிறது. வியாழக்கிழமை நிலவரப்படி அணை பகுதியில், 20 மி.மீ., தேக்கடி ஏரியில், 14.2 மி.மீ., மழை பெய்திருந்தது. அணையின் நீா்மட்டம்,128.10 அடியாகவும் (மொத்த உயரம் 142 அடி), அணைக்குள் நீா் இருப்பு 4,288 மில்லியன் கன அடியாகவும், அணைக்குள் நீா்வரத்து விநாடிக்கு, 2,648 கன அடியாகவும், தமிழகப் பகுதிக்கு நீா் வெளியேற்றம் விநாடிக்கு, 1,655 கன அடியாகவும் இருந்தது. புதன்கிழமை அணைக்குள் விநாடிக்கு, 1,904 கன அடி நீா்வரத்து இருந்த நிலையில் ஒரே நாளில் விநாடிக்கு, 744 கன அடி தண்ணீா் கூடுதலாக வந்தது குறிப்பிடத்தக்கது.
மின் உற்பத்தி: அணையிலிருந்து தமிழகப் பகுதிக்கு விநாடிக்கு 1,655 கன அடி தண்ணீா் திறக்கப்படுவதால், லோயா்கேம்ப்பில் உள்ள பெரியாறு மின்சார உற்பத்தி நிலையத்தில் 2 மின்னாக்கிகளில் தலா 42 மெகா வாட், மற்ற இரு மின்னாக்கிகளில் தலா,32 மெகா வாட் என மொத்தம் 148 மெகா வாட் மின்சாரம் உற்பத்தி செய்யப்படுகிறது.
தேக்கடியில் படகு சவாரி ரத்து: தொடா் மழையால் இடுக்கி மாவட்டத்தில் உள்ள அனைத்துப் பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு வியாழக்கிழமை விடுமுறை விடப்பட்டது. அதே போல் தேக்கடி ஏரியில் இரண்டாவது நாளாக படகு சவாரி முற்றிலும் நிறுத்தப்பட்டது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...