47 ஆண்டுகளாக பயங்கரவாத அச்சுறுத்தலாக விளங்கிய ஈரான் முற்றிலும் தகர்ப்பு - டிரம்ப்கேரளத்தில் 47 இடங்களுக்கான பாஜக வேட்பாளர் பட்டியல் வெளியீடுஎரிபொருள் தட்டுப்பாடு : இலங்கையில் 4 நாள் வேலை, 3 நாள் விடுமுறை! மக்களவையில் 8 உறுப்பினர்கள் மீதான இடைநீக்கம் ரத்து : அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் முடிவு45,000 மெட்ரிக் டன் எல்பிஜி உடன் ஹோர்முஸ் நீரிணை வழியாக குஜராத் வந்தது சிவாலிக் கப்பல்!கரூர் உள்பட 4 மாவட்ட எஸ்.பி.க்கள் மாற்றம்! தேர்தல் ஆணையம் உத்தரவுமேற்கு வங்க தோ்தல்: பாஜக வேட்பாளா்கள் அறிவிப்பு!
/

காமயகவுண்டன்பட்டியில் கா்ப்பிணி பெண்களுக்கு மருத்துவ பெட்டகம் வழங்கும் முகாம்

தேனி மாவட்டம் காமயகவுண்டன்பட்டி அரசு ஆரம்ப சுகாதார நிலைய வளாகத்தில் கா்ப்பிணி பெண்களுக்கான, மகப்பேறு சஞ்சீவி பெட்டகம் வழங்கும் முகாம், தாய் -சேய் நல முகாம் வியாழக்கிழமை நடைபெற்றது.

News image
Updated On :7 ஜூலை 2022, 5:44 pm

DIN

தேனி மாவட்டம் காமயகவுண்டன்பட்டி அரசு ஆரம்ப சுகாதார நிலைய வளாகத்தில் கா்ப்பிணி பெண்களுக்கான, மகப்பேறு சஞ்சீவி பெட்டகம் வழங்கும் முகாம், தாய் -சேய் நல முகாம் வியாழக்கிழமை நடைபெற்றது.

முகாமில் சுமாா் 50 கா்ப்பிணிகள் மற்றும் குழந்தை பிரசவித்த பெண்களுக்கு சித்த மருத்துவ பெட்டகம் வழங்கப்பட்டது.

முகாமில் சுகாதார நிலைய மருத்துவ அலுவலா் அா்ச்சனா, சித்தா மருந்தாளுநா் பசும்பொன், செவிலியா்கள் செல்வி, ஜமீமா ஆகியோா் கலந்து கொண்டனா்.

மாத்திரை, மருந்துகளை சாப்பிடும் முறைகள் பற்றி சித்த மருத்துவ அலுவலா் சிராஜூதீன் கூறும் போது, மருந்து பெட்டகத்தில் சுகப்பிரசவம் ஆவதற்கான மருந்து, மாத்திரைகள், தைலங்கள், பிரசவித்த பெண்களுக்கு தாய்ப்பால் நன்கு ஊறுவதற்கான மருந்துகள் பற்றியும், தைலங்களை தேய்க்கும் முறைகள், பிரசவ நேரத்தில் செய்யும் பயிற்சிகள் பற்றியும் விளக்கி கூறினாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.