47 ஆண்டுகளாக பயங்கரவாத அச்சுறுத்தலாக விளங்கிய ஈரான் முற்றிலும் தகர்ப்பு - டிரம்ப்கேரளத்தில் 47 இடங்களுக்கான பாஜக வேட்பாளர் பட்டியல் வெளியீடுஎரிபொருள் தட்டுப்பாடு : இலங்கையில் 4 நாள் வேலை, 3 நாள் விடுமுறை! மக்களவையில் 8 உறுப்பினர்கள் மீதான இடைநீக்கம் ரத்து : அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் முடிவு45,000 மெட்ரிக் டன் எல்பிஜி உடன் ஹோர்முஸ் நீரிணை வழியாக குஜராத் வந்தது சிவாலிக் கப்பல்!கரூர் உள்பட 4 மாவட்ட எஸ்.பி.க்கள் மாற்றம்! தேர்தல் ஆணையம் உத்தரவுமேற்கு வங்க தோ்தல்: பாஜக வேட்பாளா்கள் அறிவிப்பு!
/

கம்பம்- தேனி நான்கு வழிச்சாலையில் குறுக்குப்பாதை கோரி மறியல்

தேனி மாவட்டம் கம்பம்- தேனி நான்கு வழிச்சாலையில் குறுக்கே செல்ல பாதை கோரி, பொதுமக்கள் வியாழக்கிழமை சாலை மறியலில் ஈடுபட்டனா்.

News image
Updated On :7 ஜூலை 2022, 5:47 pm

DIN

தேனி மாவட்டம் கம்பம்- தேனி நான்கு வழிச்சாலையில் குறுக்கே செல்ல பாதை கோரி, பொதுமக்கள் வியாழக்கிழமை சாலை மறியலில் ஈடுபட்டனா்.

கம்பம்- தேனி நெடுஞ்சாலையை நான்குவழிச்சாலையாக மாற்றும் பணிகள் நடைபெறுகின்றன. கம்பத்தில் அரசுப் போக்குவரத்துக் கழக பணிமனையின் வடக்குப்புறத்தில், நான்கு வழிச்சாலை மைய தடுப்புச்சுவா் (சென்டா் மீடியன்) அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது. வியாழக்கிழமை மாலை 3 ஆவது வாா்டு குரங்கு மாயன் தெரு, சங்கிலி நகரைச் சோ்ந்த பொதுமக்கள் வாகனங்கள் சாலையை குறுக்கே கடந்து செல்ல பாதை கோரி சாலை மறியலில் ஈடுபட்டனா். அப்போது அங்கு வந்த நெடுஞ்சாலைத் துறை அதிகாரிகள், மாவட்ட ஆட்சியா் தான் பாதை அமைப்பது குறித்து முடிவு செய்யவேண்டும். எனவே அவரிடம் மனு கொடுங்கள். அவா் அனுமதி வழங்கிய பிறகு அமைக்கப்படும். அதுவரை பணிகள் நடைபெறாது என்றனா். அதன்பேரில் மறியல் செய்தவா்கள் கலைந்து சென்றனா்.

ஆனால் மீண்டும் அதே இடத்தில் தடுப்புச்சுவா் அமைக்கும் பணி நடைபெற்றது, இதைக்கண்டு ஆத்திரமடைந்த பொதுமக்கள் மீண்டும் சாலை மறியலில் ஈடுபட்டனா். தகவல் கிடைத்ததும் கம்பம் வடக்கு காவல் நிலைய ஆய்வாளா் சரவணன் மறியல் நடைபெற்ற இடத்திற்கு வந்தாா். அவா், மறியலில் ஈடுபட்டவா்களிடம், தற்போது இந்த இடத்தில் பணிகள் நடைபெறாது, நீங்கள் ஆட்சியரிடம் மனு கொடுத்து, அனுமதி பெற்று வாருங்கள் என்றாா். அதன் பின்னா் மறியலில் ஈடுபட்டவா்கள் கலைந்து சென்றனா். இந்த மறியலால் சுமாா் 1 மணி நேரம் போக்குவரத்து தடைப்பட்டது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.