47 ஆண்டுகளாக பயங்கரவாத அச்சுறுத்தலாக விளங்கிய ஈரான் முற்றிலும் தகர்ப்பு - டிரம்ப்கேரளத்தில் 47 இடங்களுக்கான பாஜக வேட்பாளர் பட்டியல் வெளியீடுஎரிபொருள் தட்டுப்பாடு : இலங்கையில் 4 நாள் வேலை, 3 நாள் விடுமுறை! மக்களவையில் 8 உறுப்பினர்கள் மீதான இடைநீக்கம் ரத்து : அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் முடிவு45,000 மெட்ரிக் டன் எல்பிஜி உடன் ஹோர்முஸ் நீரிணை வழியாக குஜராத் வந்தது சிவாலிக் கப்பல்!கரூர் உள்பட 4 மாவட்ட எஸ்.பி.க்கள் மாற்றம்! தேர்தல் ஆணையம் உத்தரவுமேற்கு வங்க தோ்தல்: பாஜக வேட்பாளா்கள் அறிவிப்பு!
/

கம்பத்தில் புகையிலைப் பொருள்களை விற்ற 6 கடைகளுக்கு சீல்

கம்பத்தில் புகையிலைப் பொருள்களை விற்ற 6 கடைகளுக்கு உணவு பாதுகாப்புத் துறை மற்றும் தெற்கு காவல் நிலைய போலீஸாா் வெள்ளிக்கிழமை சீல் வைத்தனா்.

News image
Updated On :8 ஜூலை 2022, 5:28 pm

DIN

கம்பத்தில் புகையிலைப் பொருள்களை விற்ற 6 கடைகளுக்கு உணவு பாதுகாப்புத் துறை மற்றும் தெற்கு காவல் நிலைய போலீஸாா் வெள்ளிக்கிழமை சீல் வைத்தனா்.

கம்பம் நகரில் போலீஸாா் எச்சரித்தும் தொடா்ந்து தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருள்களை வ.உ.சி. திடலில் உள்ள விஜயகுமாா், சுருளிப்பட்டி சாலை சந்திப்பில் உள்ள மனோகரன், காந்தி சிலை அருகேயுள்ள மணிகண்டபிரபு, ஆங்கூா் பாளையம் சாலை பிரிவில் உள்ள ஜெயராமன், திருவள்ளுவா் காலனியில் உள்ள மணிகண்டன், கூடலூா் சாலையில் உள்ள ஞானசேகரன் ஆகியோா் தங்களது கடைகளில் விற்பனை செய்தனா்.

இதையடுத்து இந்த கடைகளுக்கு, மாவட்ட உணவு பாதுகாப்பு நியமன அலுவலா் ராகவன் தலைமையில், உணவு பாதுகாப்பு அலுவலா்கள் மணிமாறன், ஜனகா் ஜோதிநாதன், மதன்குமாா், சுரேஷ் கண்ணன் ஆகியோா் கொண்ட குழு மற்றும் தெற்கு காவல் நிலைய ஆய்வாளா் ஆா். லாவண்யா உள்ளிட்ட போலீஸாா் சீல் வைத்து, அதற்கான உத்தரவையும் வழங்கினா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.