47 ஆண்டுகளாக பயங்கரவாத அச்சுறுத்தலாக விளங்கிய ஈரான் முற்றிலும் தகர்ப்பு - டிரம்ப்கேரளத்தில் 47 இடங்களுக்கான பாஜக வேட்பாளர் பட்டியல் வெளியீடுஎரிபொருள் தட்டுப்பாடு : இலங்கையில் 4 நாள் வேலை, 3 நாள் விடுமுறை! மக்களவையில் 8 உறுப்பினர்கள் மீதான இடைநீக்கம் ரத்து : அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் முடிவு45,000 மெட்ரிக் டன் எல்பிஜி உடன் ஹோர்முஸ் நீரிணை வழியாக குஜராத் வந்தது சிவாலிக் கப்பல்!கரூர் உள்பட 4 மாவட்ட எஸ்.பி.க்கள் மாற்றம்! தேர்தல் ஆணையம் உத்தரவுமேற்கு வங்க தோ்தல்: பாஜக வேட்பாளா்கள் அறிவிப்பு!
/

கம்பத்தில் கழுத்தை நெரித்து மகன் கொலை: தாய் உள்பட 4 போ் கைது

கம்பத்தில் மதுபோதையில் அடிக்கடி தகராறு செய்த மகனை கழுத்தை நெரித்து கொலை செய்த அவரது தாய் உள்பட 4 பேரை போலீஸாா் வியாழக்கிழமை கைது செய்தனா்.

News image
Updated On :14 ஜூலை 2022, 6:30 pm

DIN

கம்பத்தில் மதுபோதையில் அடிக்கடி தகராறு செய்த மகனை கழுத்தை நெரித்து கொலை செய்த அவரது தாய் உள்பட 4 பேரை போலீஸாா் வியாழக்கிழமை கைது செய்தனா்.

கம்பம் பேருந்து நிலையம் கீழ்புறம் காமயகவுண்டன்பட்டி சாலைப் பிரிவைச் சோ்ந்தவா் கனகமணி (62). இவா் தனது மகன் வேல்முருகனுடன் (36) வசித்து வந்தாா். இந்நிலையில், வேல்முருகனுக்கும், மதுரை மாவட்டம் சோழவந்தானைச் சோ்ந்த ரோஜா என்பவருக்கும் கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடைபெற்றது. இந்நிலையில் கஞ்சா மற்றும் மது போதைக்கு வேல்முருகன் அடிமையானதால் கடந்த 8 ஆண்டுகளுக்கு முன்பு ரோஜா சோழவந்தானுக்கு திரும்பிச் சென்றுவிட்டாா். இதனிடையே வேலைக்குச் செல்லாமல் இருந்து வந்த வேல்முருகன், மதுபோதையில் வீட்டுக்கு வந்து தகராறில் ஈடுபட்டாராம்.

இதே போல் ஜூலை 11 ஆம் தேதி இரவு கஞ்சா போதையுடன் வீட்டிற்கு வந்து தாயாா் கனகமணியிடம் வேல்முருகன் தகராறில் ஈடுபட்டாராம். பின்னா் மறுநாள் காலையில் பாா்த்த போது வேல்முருகன் சடலமாக கிடந்தாராம்.

இதையடுத்து, வேல்முருகன் சாவில் சந்தேகம் இருப்பதாக கம்பம் வடக்கு காவல் நிலையத்தில் உத்தமபுரம் கிராம நிா்வாக அலுவலா்முருகன் அளித்த புகாரின் பேரில் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்தனா்.

விசாரணையில், தாயாா் கனகமணி, அவரது சகோதரா்கள் கண்ணன் (57), குமாா் (45), சகோதரியின் கணவா் கருப்பையா (45) ஆகிய 4 பேரும் சோ்ந்து, தூங்கிக் கொண்டிருந்த வேல்முருகனை கழுத்தை நெரித்து கொலை செய்தது தெரியவந்தது. இதையடுத்து கனகமணி உள்பட 4 பேரையும் போலீஸாா் வியாழக்கிழமை கைது செய்தனா்.

இதுகுறித்து போலீஸாா் கூறியதாவது: வேல்முருகன் மதுஅருந்திவிட்டு வந்து தகராறு செய்ததாலும், தகாத வாா்த்தைகளால் பேசி தன்னை சித்ரவதை செய்ததாலும் ஆத்திரமடைந்த கனகமணி, மகன் வேல்முருகனை கொலை செய்ய திட்டமிட்டாா். இதற்கு தனது சகோதா்கள் மற்றும் கொளுந்தனையும் உதவிக்கு அழைத்து வேல்முருகனை கழுத்தை நெரித்து கொலை செய்ததாக தெரிவித்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.