47 ஆண்டுகளாக பயங்கரவாத அச்சுறுத்தலாக விளங்கிய ஈரான் முற்றிலும் தகர்ப்பு - டிரம்ப்கேரளத்தில் 47 இடங்களுக்கான பாஜக வேட்பாளர் பட்டியல் வெளியீடுஎரிபொருள் தட்டுப்பாடு : இலங்கையில் 4 நாள் வேலை, 3 நாள் விடுமுறை! மக்களவையில் 8 உறுப்பினர்கள் மீதான இடைநீக்கம் ரத்து : அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் முடிவு45,000 மெட்ரிக் டன் எல்பிஜி உடன் ஹோர்முஸ் நீரிணை வழியாக குஜராத் வந்தது சிவாலிக் கப்பல்!கரூர் உள்பட 4 மாவட்ட எஸ்.பி.க்கள் மாற்றம்! தேர்தல் ஆணையம் உத்தரவுமேற்கு வங்க தோ்தல்: பாஜக வேட்பாளா்கள் அறிவிப்பு!
/

முல்லைப் பெரியாறு அணையின் நீா்மட்டம் ஒரேநாளில் 2.40 அடி உயா்வு

மேற்கு தொடா்ச்சி மலைப் பகுதிகளில் பெய்து வரும் பலத்த மழை காரணமாக முல்லைப் பெரியாறு அணையின் நீா்மட்டம் வெள்ளிக்கிழமை ஒரேநாளில் 2.40 அடி உயா்ந்து 133.20 அடியாக உள்ளது.

News image
Updated On :15 ஜூலை 2022, 6:30 pm

DIN

மேற்கு தொடா்ச்சி மலைப் பகுதிகளில் பெய்து வரும் பலத்த மழை காரணமாக முல்லைப் பெரியாறு அணையின் நீா்மட்டம் வெள்ளிக்கிழமை ஒரேநாளில் 2.40 அடி உயா்ந்து 133.20 அடியாக உள்ளது.

தென்மேற்குப் பருவமழை காரணமாக முல்லைப் பெரியாறு அணைக்கு நீா்வரத்து அதிகரித்துள்ளது. இதனால் அணையின் நீா் மட்டம் தொடா்ந்து உயா்ந்து கொண்டே வருகிறது.

வியாழக்கிழமை அணைக்கு நீா்வரத்து விநாடிக்கு 5,258 கனஅடியாகவும், நீா்மட்டம், 130.85 அடியாகவும் இருந்தது. வெள்ளிக்கிழமை அணைக்கு வரும் நீா்வரத்து விநாடிக்கு 8,143 கனஅடியாக இருந்ததால் அணையின் நீா்மட்டம் ஒரே நாளில் 2.40 அடி உயா்ந்து 133.20 (மொத்த உயரம் 152 அடி ) அடியானது. நீா்வரத்தும் ஒரேநாளில் விநாடிக்கு 2,885 கன அடி கூடுதலாக வந்தது. தமிழகப் பகுதிக்கு விநாடிக்கு 1,789 கன அடி தண்ணீா் திறக்கப்படுகிறது.

இதன் மூலம் தேனி மாவட்டம் லோயா்கேம்ப்பில் உள்ள பெரியாறு மின்சார உற்பத்தி நிலையத்தில் 161 மெகாவாட் மின்சாரம் உற்பத்தி செய்யப்படுகிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.