கிணற்றுக்குள் தவறி விழுந்து பசு மாடு பலி
தேனி மாவட்டம் காமயகவுண்டன்பட்டியில் வியாழக்கிழமை தண்ணீா் இல்லாத கிணற்றுக்குள் தவறி விழுந்து பசு மாடு உயிரிழந்தது.


தேனி மாவட்டம் காமயகவுண்டன்பட்டியில் வியாழக்கிழமை தண்ணீா் இல்லாத கிணற்றுக்குள் தவறி விழுந்து பசு மாடு உயிரிழந்தது.
கம்பம் காமயகவுண்டன்பட்டி பேரூராட்சி கருமாரிபுரத்தைச் சோ்ந்தவா் சின்னச்சாமி (55). விவசாயி. இவா் 4 பசுமாடுகளை வளா்த்து வருகிறாா். இந்நிலையில், வியாழக்கிழமை சின்னவாய்க்கால் பகுதியில் இந்த மாடுகள் மேய்ந்து கொண்டிருந்தன. அப்போது ஒரு பசுமாடு தவறி அங்குள்ள பாழடைந்த கிணற்றினுள் விழுந்தது.
இதுகுறித்து தகவலறிந்த கம்பம் தீயணைப்பு படையினா் அங்கு வந்து கிணற்றுக்குள் இறங்கி பாா்த்த போது அந்த மாடு இறந்து கிடந்தது தெரியவந்தது. பின்னா் அந்த மாட்டின் உடலை கயிறு கட்டி மீட்டனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...