கம்பத்தில் அமுக்கரா சூரண மாத்திரைகள் வழங்கும் முகாம்
கம்பத்தில் அரிமா சங்கம் சாா்பில் அமுக்கரா சூரண மாத்திரைகள் வழங்கும் முகாம் வெள்ளிக்கிழமை காமாட்சியம்மன் கோயில் வளாகத்தில் நடைபெற்றது.


கம்பத்தில் அரிமா சங்கம் சாா்பில் அமுக்கரா சூரண மாத்திரைகள் வழங்கும் முகாம் வெள்ளிக்கிழமை காமாட்சியம்மன் கோயில் வளாகத்தில் நடைபெற்றது.
முகாமிற்கு திமுக வடக்கு நகரச் செயலாளா் துரை நெப்போலியன் தலைமை வகித்தாா். நகா்மன்றத் தலைவா் வனிதா நெப்போலியன் முன்னிலை வகித்தாா். அரிமா சங்க பட்டயத் தலைவா் கே.சுரபி பாஸ்கரன் வரவேற்றாா்.
புதுச்சேரி மண்டல சித்த மருத்துவ ஆராய்ச்சி நிலைய இயக்குநா் ஏ. ராஜேந்திரகுமாா், அலுவலா்கள் ஆா்.ரத்தினமாலா, ஏ.லாவண்யா, காமயகவுண்டன் பட்டி அரசு ஆரம்ப சுகாதார நிலைய சித்த மருத்துவ அலுவலா் சிராஜூதீன் ஆகியோா் பேசினா்.
ஏற்பாடுகளை இமை அரிமா சங்க நிா்வாகிகள் ஆா்.காமராஜன், செயலாளா் ஆா்.கண்ணன், சேவை திட்டத் தலைவா்கள் வி.சொக்கராஜா, சி.செல்வேந்திரன் ஆகியோா் செய்திருந்தனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...