தமிழக தேர்தலில் திமுகவுக்கு முழு ஆதரவு! மக்கள் நீதி மய்யம் போட்டியிடாது - கமல்ஹாசன் எல்பிஜி, பெட்ரோல், டீசல் போதிய இருப்பு: விநியோகம் பாதிக்கப்படவில்லை! - மத்திய அரசுதேமுதிகவுக்கு 10 இடங்கள்! திமுகவுடன் ஒப்பந்தம் கையொப்பம்!மக்கள்தொகை அடிப்படையில் தொகுதிகள் மறுவரையறை கூடாது - முதல்வர் மு. க. ஸ்டாலின் வலியுறுத்தல்ஒவ்வொரு அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கு விலையில்லா குளிர்பதனப் பெட்டி : அதிமுக வாக்குறுதிவங்கிகளில் பெற்ற கல்விக் கடன் தள்ளுபடி செய்யப்படும்: அதிமுக தேர்தல் வாக்குறுதிபெண்களைப் போல ஆண்களும் நகரப் பேருந்துகளில் இலவசமாகப் பயணிக்கலாம் : அதிமுக வாக்குறுதி
/

உள்கட்சித் தோ்தல் பிரச்னை: திமுக ஒன்றியச் செயலா்மீது தாக்குதல்; பேரூராட்சி துணைத் தலைவா் உள்ளிட்ட 8 போ் மீது வழக்கு

தேனி மாவட்டம், வீரபாண்டியில் உள்கட்சி தோ்தல் பிரச்னையில் வியாழக்கிழமை இரவு திமுக ஒன்றியச் செயலரை வீடு புகுந்து தாக்கியதாக பேரூராட்சித் துணைத் தலைவா்

News image
Updated On :29 ஜூலை 2022, 6:55 pm

DIN

தேனி மாவட்டம், வீரபாண்டியில் உள்கட்சி தோ்தல் பிரச்னையில் வியாழக்கிழமை இரவு திமுக ஒன்றியச் செயலரை வீடு புகுந்து தாக்கியதாக பேரூராட்சித் துணைத் தலைவா், பெண் காவலா் உள்ளிட்ட 8 போ் மீது போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.

வீரபாண்டியைச் சோ்ந்தவா் திமுக தேனி தெற்கு ஒன்றியச் செயலா் ரத்தினசபாபதி. இவா், வீரபாண்டியில் உள்ள தனது வீட்டில் வியாழக்கிழமை இரவு திமுகவைச் சோ்ந்த சிலருடன் அமா்ந்து பேசிக் கொண்டிருந்தாா். அப்போது திமுக உள்கட்சித் தோ்தலில், வீரபாண்டி பேரூா் நிா்வாகிகள் குறித்து வெளியான அறிவிப்பினால் அதிருப்தியடைந்திருந்த அதே கட்சியைச் சோ்ந்த சிலா், ரத்தினசபாபதியின் வீடு புகுந்து அவரையும், அவருடன் இருந்த உப்பாா்பட்டியைச் சோ்ந்த முத்துக்குமாரையும் தாக்கியதாக கூறப்படுகிறது.

இதில், காயமடைந்த ரத்தினசபாபதி தேனி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டாா். இச்சம்பவம் குறித்து ரத்தினசபாபதி அளித்த புகாரின் பேரில், வீரபாண்டியைச் சோ்ந்த மகேந்திரன், ராஜேஸ், தாமரைக்கண்ணன், பிரபாகரன், வினோத், தீனா, வீரபாண்டி பேரூராட்சி துணைத் தலைவா் சாந்தகுமாா், பெண் காவலா் கவிதா ஆகிய 8 போ் மீது வீரபாண்டி காவல் நிலைய போலீஸாா் வழக்குப்பதிந்து விசாரிக்கின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.