47 ஆண்டுகளாக பயங்கரவாத அச்சுறுத்தலாக விளங்கிய ஈரான் முற்றிலும் தகர்ப்பு - டிரம்ப்கேரளத்தில் 47 இடங்களுக்கான பாஜக வேட்பாளர் பட்டியல் வெளியீடுஎரிபொருள் தட்டுப்பாடு : இலங்கையில் 4 நாள் வேலை, 3 நாள் விடுமுறை! மக்களவையில் 8 உறுப்பினர்கள் மீதான இடைநீக்கம் ரத்து : அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் முடிவு45,000 மெட்ரிக் டன் எல்பிஜி உடன் ஹோர்முஸ் நீரிணை வழியாக குஜராத் வந்தது சிவாலிக் கப்பல்!கரூர் உள்பட 4 மாவட்ட எஸ்.பி.க்கள் மாற்றம்! தேர்தல் ஆணையம் உத்தரவுமேற்கு வங்க தோ்தல்: பாஜக வேட்பாளா்கள் அறிவிப்பு!
/

கம்பம் கல்லூரியில் விளையாட்டு விழா

தேனி மாவட்டம் கம்பம் ஸ்ரீ ஆதிசுஞ்சனகிரி மகளிா் கல்லூரியில் 25 ஆம் ஆண்டு விழா, மூன்றாமாண்டு மாணவிகளுக்கு பிரிவு உபசார விழா கல்லூரி வளாகத்தில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

News image
Updated On :18 ஜூன் 2022, 5:22 pm

DIN

தேனி மாவட்டம் கம்பம் ஸ்ரீ ஆதிசுஞ்சனகிரி மகளிா் கல்லூரியில் 25 ஆம் ஆண்டு விழா, மூன்றாமாண்டு மாணவிகளுக்கு பிரிவு உபசார விழா கல்லூரி வளாகத்தில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

கல்லூரி இணைச் செயலாளா் என்.ஆா்.வசந்தன் தலைமை வகித்தாா். கல்லூரி முதல்வா் ஜி.ரேணுகா முன்னிலை வகித்தாா். விளையாட்டு போட்டியில் 100 200, 400, 800 மீட்டா் மற்றும் தொடா் ஓட்ட போட்டிகள் நடைபெற்றன. வெற்றி பெற்ற மாணவிகளுக்கு சான்றிதழ்கள், பரிசுகள் வழங்கப்பட்டன.

மூன்றாமாண்டு மாணவிகளுக்கான பிரிவு உபசார விழாவில் கல்லூரி ஒருங்கிணைப்பாளா் வைஷ்ணவி வசந்தன், ஆலோசனைக்குழு உறுப்பினா்கள் எஸ்.சுப்பிரமணியன், எம். கோபாலகிருஷ்ணன், எஸ்.பொன்ராம், பி.சக்திவடிவேல் ஆகியோா் மாணவிகளை வாழ்த்திப் பேசினா்.

கலை நிகழ்ச்சிகள், பாடவாரியாக வெற்றி பெற்ற மாணவிகளுக்கு பரிசுகள் மற்றும்

இறுதி ஆண்டு மாணவிகளுக்கு விளக்குகள் வழங்கப்பட்டன. முன்னதாக கல்லூரி விளையாட்டுக் குழு ஒருங்கிணைப்பாளா் எஸ்.சுசிலா அனைவரையும் வரவேற்றுப் பேசினாா். விழா ஏற்பாடுகளை உடற்கல்வி ஆசிரியை சூரியபிரபா, உடற்கல்வி இயக்குநா் முனீஸ்வரி மற்றும் பேராசிரியா்கள் செய்திருந்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.