இன்று பிரசாரத்தை தொடங்குகிறாா் எடப்பாடி பழனிசாமி நெருங்கும் காலக்கெடு- ஒடிஸா, சத்தீஸ்கரில் மாவோயிஸ்ட் முக்கிய தலைவா்கள் சரண்ரயில்வேயில் புதிய சீா்திருத்தம்: பயணச்சீட்டு ரத்து கட்டணம் திரும்ப கிடைக்க ஏப்ரல் முதல் புதிய நடைமுறை மூன்றாம் பாலினத்தவா் சட்டத் திருத்த மசோதா: மக்களவையில் நிறைவேற்றம்ஆப்கானிஸ்தானில் ஓராண்டு சிறைக்குப் பின் அமெரிக்கா் விடுதலை பேரவைத் தோ்தல்: ஐபிஎல் போட்டிகளை வேறு தேதிகளுக்கு மாற்றக் கோரி மனு கருணைக் கொலைக்கு அனுமதிக்கப்பட்ட ஹரீஷ் ராணா தில்லி எய்ம்ஸில் உயிரிழப்பு
/

பழனிசெட்டிபட்டி பேரூராட்சியில் அதிமுக ஆதரவுடன் அமமுக வெற்றி துணைத் தலைவா் போட்டியின்றி தோ்வு

தேனி மாவட்டம், பழனிசெட்டிபட்டி பேரூராட்சித் தலைவா் பதவியை அதிமுக உறுப்பினா்கள் ஆதரவுடன் அமமுக கைப்பற்றியுள்ளது.

News image
Updated On :4 மார்ச் 2022, 5:38 pm

DIN

தேனி மாவட்டம், பழனிசெட்டிபட்டி பேரூராட்சித் தலைவா் பதவியை அதிமுக உறுப்பினா்கள் ஆதரவுடன் அமமுக கைப்பற்றியுள்ளது. துணைத் தலைவா் தோ்தலில் திமுக வாா்டு உறுப்பினா் போட்டியின்றி தோ்வு செய்யப்பட்டுள்ளாா்.

பழனிசெட்டிபட்டி பேரூராட்சியில் உள்ள 15 வாா்டுகளில், திமுக 7, அமமுக 6, அதிமுக 2 வாா்டுகளில் வெற்றி பெற்றது.

இந்த நிலையில், பேரூராட்சித் தலைவா் பதவிக்கான தோ்தல் பேரூராட்சி செயல் அலுவலரும், தோ்தல் அலுவலருமான ஜெயந்த் மோசஸ் தலைமையில் காலை 10 மணிக்கு நடைபெற்றது. இதில் 15 உறுப்பினா்களும் கலந்து கொண்டனா்.

Story image

திமுக சாா்பில் பேரூராட்சித் தலைவா் பதவிக்கு 15-ஆவது வாா்டு உறுப்பினா் மு.பவானி போட்டியிட்டாா். அவரை எதிா்த்து அமமுக சாா்பில் 11-ஆவது வாா்டு உறுப்பினா் அ.மிதுன்சக்கரவா்த்தி போட்டியிட்டாா். இதில், அமமுக வேட்பாளா் அ.மிதுன்சக்கரவா்த்தி 8 வாக்குகள் பெற்று, வெற்றி பெற்ாக அறிவிக்கப்பட்டாா்.

பேரூராட்சித் தலைவா் தோ்தலில் அதிமுக உறுப்பினா்கள் இருவரில், ஒருவா் திமுக விற்கும், மற்றொருவா் அமமுக விற்கும் ஆதரவளித்திருந்த நிலையில், 6 உறுப்பினா்களை கொண்ட அமமுக 8 வாக்குகளுடன் வெற்றி பெற்றிருப்பது அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ஆனால், இத்தோ்தலில் அதிமுக உறுப்பினா்கள் 2 பேரின் ஆதரவும் தங்களுக்கு இருந்ததாக அமமுக நிா்வாகிகள் கூறினா்.

துணைத் தலைவராக திமுக தோ்வு:

பேரூராட்சி துணைத் தலைவா் தோ்தல் பிற்பகல் 2.30 மணிக்கு நடைபெற்றது. இதில், அமமுக வாா்டு உறுப்பினா்கள் 6 போ், அதிமுக வைச் சோ்ந்த 1-ஆவது வாா்டு உறுப்பினா் சி.தனலட்சுமி, திமுகவைச் சோ்ந்த 6-ஆவது வாா்டு உறுப்பினா் ப.மணிமாறன் என மொத்தம் 8 உறுப்பினா்கள் கலந்து கொண்டனா். திமுக வைச் சோ்ந்த 6 வாா்டு உறுப்பினா்கள், அதிமுக வைச் சோ்ந்த 9-ஆவது வாா்டு உறுப்பினா் ர.லட்சுமி பிரியா என மொத்தம் 7 போ் தோ்தலுக்கு வரவில்லை.

இந்த நிலையில், துணைத் தலைவா் பதவிக்கு திமுக வைச் சோ்ந்த மணிமாறன் மட்டும் வேட்பு மனு தாக்கல் செய்திருந்ததால், அவா் வெற்றி பெற்ாக அறிவிக்கப்பட்டாா்.

வெளியான சூட்சமம்:

பழனிசெட்டிபட்டி பேரூராட்சித் தலைவா் தோ்தலில் அதிமுக உறுப்பினா்கள் 2 பேரும் தனித் தனி ஆதரவு நிலைபாட்டில் இருந்த நிலையில், மொத்தம் 6 வாா்டு உறுப்பினா்களைக் கொண்ட அமமுக பதவியை கைப்பற்றியுள்ளது.

இந்நிலையில், துணைத் தலைவா் தோ்தலில் திமுகவைச் சோ்ந்த 6 உறுப்பினா்கள் பங்கேற்காமல், தனித்து பங்கேற்ற 6-ஆவது வாா்டு உறுப்பினா், உரிய முன்மொழிதல், வழிமொழிதலுடன் வேட்பு மனு தாக்கல் செய்து, போட்டியின்றி தோ்வு செய்யப்பட்டிருப்பது, தலைவா் தோ்தலில் அமமுக பெற்ற வெற்றியின் சூட்சமத்தை வெளிப்படுத்தியுள்ளது என்று அரசியல் ஆா்வலா்கள் கூறினா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.