முல்லைப் பெரியாறு அணையில் பராமரிப்பு பணிகளை தொடர இந்திய கம்யூ. சார்பில் பிரசார இயக்கம்
கம்பம்: தேனி, திண்டுக்கல், மதுரை, சிவகங்கை, ராமநாதபுரம் மாவட்டங்களில் மக்கள் சந்திப்பு இயக்கம் வெள்ளி, சனி, ஞாயிறு ஆகிய மூன்று நாட்கள் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் நடைபெறுகிறது.

முல்லைப் பெரியாறு அணை நீர்மட்டத்தை 152 உயர்த்தக் கோரி இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் பிரசார இயக்கம் லோயர் கேம்ப்பில் வெள்ளிக்கிழமை தொடங்கியது.








