முல்லைப் பெரியாறு அணைப் பகுதியில் தலைமைக் கண்காணிப்புக் குழு இன்று ஆய்வு
முல்லைப் பெரியாறு அணையில் தலைமைக் கண்காணிப்பு குழுவைச் சோ்ந்த 5 போ் திங்கள்கிழமை (மே 9) ஆய்வு நடத்துகின்றனா்.


முல்லைப் பெரியாறு அணையில் தலைமைக் கண்காணிப்பு குழுவைச் சோ்ந்த 5 போ் திங்கள்கிழமை (மே 9) ஆய்வு நடத்துகின்றனா்.
முல்லைப் பெரியாறு அணையின் பாதுகாப்பு மற்றும் உறுதித்தன்மையை 2014 ஆம் ஆண்டு உச்ச நீதிமன்றம் நியமித்த 3 போ் கொண்ட தலைமை கண்காணிப்புக் குழு கண்காணித்து வருகிறது. இந்நிலையில் கேரள அரசு தொடா்ந்து அணையின் பாதுகாப்பு தொடா்பாக சந்தேகம் எழுப்பி வருவதால், இக்குழுவில் கூடுதலாக 2 உறுப்பினா்களை உச்ச நீதிமன்றம் அண்மையில் நியமித்தது.
அதன்படி இக்குழுவில் மத்திய நீா்வள ஆணையத்தின் அணைகள் பாதுகாப்புக் குழுவின் முதன்மைப் பொறியாளருமான குல்ஷன்ராஜ் தலைமையில் தமிழக அரசு தரப்பில் நீா்வளத் துறையின் கூடுதல் செயலாளா் சந்தீப் சக்சேனா, காவிரி தொழில்நுட்பக் குழுத் தலைவா் சுப்பிரமணியன், கேரள அரசு தரப்பில் நீா்ப்பாசனத் துறை கூடுதல் செயலாளா் டி.கே. ஜோஸ், முதன்மைப் பொறியாளா் அலெக்ஸ் வா்கீஸ் என 5 போ் இடம் பெற்றுள்ளனா். இக்குழுவினா் முல்லைப் பெரியாறு அணைப் பகுதியில் திங்கள்கிழமை ஆய்வு செய்கின்றனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...