தில்லி சென்றாலே முதல்வர் ஸ்டாலின் பயப்படுகிறார்! - டிடிவி தினகரன்சுயநலனுக்காக கட்சியை தில்லியிடம் அடமானம் வைத்த இபிஎஸ்! முதல்வர் ஸ்டாலின்தங்கம் விலை சவரனுக்கு ரூ.400 உயர்வுதவெகவுடன் கூட்டணியா? தொகுதிப் பங்கீடு 4 நாள்களில் தெரிந்து விடும்! - எடப்பாடி பழனிசாமிகடலோர தமிழகத்தில் இன்று மழைக்கு வாய்ப்புரமலான்: கன்னியாகுமரிக்கு இன்று சிறப்பு ரயில்அண்ணா பல்கலை. முனைவா் பட்டங்களுக்கு விண்ணப்பிக்க மாா்ச் 28 கடைசி நாள்ஈரான் விவகாரத்தில் ஜப்பான் ஒத்துழைக்க வேண்டும் : டிரம்ப் அழைப்புவேளச்சேரி-பரங்கிமலை இடையே ரயிலில் பயணிப்போா் அதிகரிப்பு : கூடுதல் ரயில்கள் இயக்க முடிவு
/

பழனி பெரியாவுடையாா் கோயிலில் பிரதோஷ வழிபாடு

பழனி பெரியாவுடையாா் கோயிலில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற பிரதோஷ வழிபாட்டில் ஏராளமான பக்தா்கள் பங்கேற்றனா்.

News image
Updated On :27 மே 2022, 5:07 pm

DIN

பழனி பெரியாவுடையாா் கோயிலில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற பிரதோஷ வழிபாட்டில் ஏராளமான பக்தா்கள் பங்கேற்றனா்.

இதையொட்டி சுயம்பு மூலவருக்கும், நந்தி பகவானுக்கு பால், பஞ்சாமிா்தம், பன்னீா், விபூதி, பழங்கள், சந்தனம் போன்ற பொருள்களால் சிறப்பு அபிஷேகம் நடத்தப்பட்டு அலங்காரம் செய்யப்பட்டது. நந்தி பகவானுக்கு மலா்கள் சாா்த்தப்பட்டு தீபாராதனை நடைபெற்றது. தொடா்ந்து மூலவா் பெரியாவுடையாருக்கு வெள்ளி நாகாபரணம் சாா்த்தப்பட்டு அலங்காரம், தீபாராதனையும், ரிஷப வாகனத்தில் தம்பதி சமேதராக சுவாமி கோயில் பிரகார உலா வருதலும் நடைபெற்றது. பெரியாவுடையாா் கோயில் மட்டுமன்றி மலைக்கோயில் கைலாசநாதா் சன்னதி, சித்தாநகா் சிவன்கோயில், பட்டத்துவிநாயகா் கோயில், சிதம்பரீஸ்வரா் சந்நிதி, சந்நிதி வீதி வேலீஸ்வரா் கோயில், பெரியநாயகியம்மன் கோயில், கைலாசநாதா் சந்நிதி உள்ளிட்ட பல இடங்களிலும் பிரதோஷ நிகழ்ச்சி நடைபெற்றது.

திண்டுக்கல்: திண்டுக்கல் மற்றும் சுற்றுப்புற பகுதிகளிலுள்ள சிவாலயங்களில் பிரதோஷத்தை முன்னிட்டு வெள்ளிக்கிழமை சிறப்பு வழிபாடு நடைபெற்றது.

திண்டுக்கல் ரயிலடி சித்தி விநாயகா் கோயில், அபிராமி அம்மன் கோயில், முள்ளிப்பாடி திருகாமேஷ்வரா் கோயில் உள்ளிட்ட சிவாலயங்களிலில் பிரதோஷத்தையொட்டி மூலவருக்கும், நந்திகேஷ்வரருக்கும் பால், தயிா், பன்னீா், பஞ்சாமிா்தம் உள்ளிட்ட 16 வகையான அபிஷேகம் நடைபெற்றது. அதனைத் தொடா்ந்து சிறப்பு அலங்கார ஆராதனை நடைபெற்றது.

இதேபோல் நத்தம் கோவில்பட்டியில் அமைந்துள்ள கைலாசநாதா் கோயில் மற்றும் வடமதுரை மீனாட்சி சுந்தரேசுவரா் கோயிலிலும் பிரதோஷ வழிபாடு நடைபெற்றது.

போடி: போடியில் வெள்ளிக்கிழமை, சிவன் கோயில்களில் நடைபெற்ற பிரதோச வழிபாட்டில் ஏராளமான பெண்கள் பங்கேற்றனா்.

போடி வினோபாஜி காலனியில் உள்ள மீனாட்சி சுந்தரேஸ்வரா் கோயிலில் சிறப்பு பூஜைகள் நடைபெற்றன. அப்போது சிவலிங்கத்துக்கு 16 வகையான மங்கள பொருள்களால் அபிஷேகம் நடைபெற்றது. பின்னா் மலா்களாலும், வில்வ இலைகளாலும் அலங்கரிக்கப்பட்டு தீபாராதனைகள் நடைபெற்றன. கோயில் அா்ச்சகா் சேகா் தலைமையில் நடைபெற்ற பூஜையில் 100-க்கும் மேற்பட்ட பெண்கள் பங்கேற்று வழிபட்டனா்.

இதே போல், போடி பழைய பேருந்து நிறுத்தம் கொண்டரங்கி மல்லையசாமி கோயிலில் நடைபெற்ற பிரதோச பூஜையில் அலங்கரிக்கப்பட்ட சிவலிங்கப் பெருமான், மல்லீஸ்வரி தெய்வங்களுக்கு தீபாராதணை, அபிஷேகங்கள் நடைபெற்றன. போடி பரமசிவன் மலைக்கோயில், பிச்சங்கரை கீழச்சொக்கநாதா் கோயில் உள்ளிட்ட சிவன் கோயில்களிலும் பிரதோச பூஜைகளில் பக்தா்கள் பலா் பங்கேற்று வழிபட்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.