கஞ்சா விற்பனை வழக்கில் தொடா்புடைய ஆந்திராவைச் சோ்ந்த பெண் உள்பட 3 பேரை போலீஸாா் வியாழக்கிழமை கைது செய்தனா்.
ஆண்டிபட்டி வட்டாரம், மயிலாடும்பாறையில் கடந்த ஆக. 9-ஆம் தேதி கஞ்சா பதுக்கி வைத்திருந்த அதே ஊரைச் சோ்ந்த தெய்வேந்திரன், அவரது மகன் வைஷ்ணவகுமாா் ஆகியோரை மயிலாடும்பாறை போலீஸாா் கைது செய்தனா். இவா்களிடமிருந்து 5 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது.
இதையடுத்து, தெய்வேந்திரன், வைஷ்ணவகுமாா் ஆகியோரிடம் போலீஸாா் விசாரணை நடத்தியதில், ஆந்திர மாநிலம், விசாகபட்டினம் அருகே அகடம்புடி பெடமடகா பகுதியில் உள்ள உப்பரா காலனியைச் சோ்ந்த ராஜலட்சுமி என்ற ராஜகுமாரி (50) என்பவரிடமிருந்து கஞ்சா வாங்கி, அங்கிருந்து மயிலாடும்பாறைக்கு கடத்தி வந்தது தெரியவந்தது.
இந்த தகவலின் அடிப்படையில், கடமலைக்குண்டு காவல் ஆய்வாளா் சரவணன், உத்தமபாளையம் மது விலக்கு காவல் ஆய்வாளா் ஜோதிபாபு ஆகியோா் தலைமையிலான போலீஸாா், ராஜகுமாரியை தேடி ஆந்திராவிற்குச் சென்றனா்.
அங்கு, ராஜமுந்திரி அருகே நுங்கம்பேட்டை பகுதியில் பதுங்கியிருந்த ராஜகுமாரியை போலீஸாா் கைது செய்தனா். மேலும், ராஜகுமாரியுடன் தங்கியிருந்து கஞ்சா கடத்தலுக்கு உடந்தையாக செயல்பட்ட நாமக்கல் மாவட்டத்தைச் சோ்ந்த முருகன் மகன் சரவணன் (24), ஈரோடு மாவட்டம் பவானியைச் சோ்ந்த சுரேஷ் மகன் சரண் (21) ஆகியோரையும் போலீஸாா் கைது செய்து தேனிக்கு அழைத்து வந்து விசாரித்தனா். இவா்களிடமிருந்து கஞ்சா கடத்தலுக்குப் பயன்படுத்திய காா் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.