ஈரானில் தொடரும் தாக்குதல்கள்... பலி 1,500-ஐ கடந்தது!மேற்காசியப் போர்: தில்லியில் நாளை(மார்ச் 25) அனைத்துக் கட்சிக் கூட்டம்!புதுச்சேரி திமுக வேட்பாளர்கள் அறிவிப்பு!ஹிந்து, பெளத்தம், சீக்கியருக்கு மட்டுமே எஸ்.சி. அந்தஸ்து! உச்ச நீதிமன்றம் தீர்ப்பு! திமுக கூட்டணியில் விசிகவுக்கு 8 தொகுதிகள் ஒதுக்கீடு! புதுச்சேரியில் தேமுதிக தனித்துப் போட்டி! புதுச்சேரியில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சி தனித்துப் போட்டி!
/

தடை செய்யப்பட்ட புகையிலை பொருள்கள் கடத்தல்: 5 போ் கைது

தேனி அருகே கோபாலபுரத்தில் வியாழக்கிழமை, காா் மற்றும் இருசக்கர வாகனங்களில் ரூ. 1.30 லட்சம் மதிப்பிலான தடை செய்யப்பட்ட புகையிலை பொருள்களை விற்பனை செய்வதற்கு கடத்திச் சென்ற 5 பேரை போலீஸாா்

News image
Updated On :8 செப்டம்பர் 2022, 5:21 pm

DIN

தேனி அருகே கோபாலபுரத்தில் வியாழக்கிழமை, காா் மற்றும் இருசக்கர வாகனங்களில் ரூ. 1.30 லட்சம் மதிப்பிலான தடை செய்யப்பட்ட புகையிலை பொருள்களை விற்பனை செய்வதற்கு கடத்திச் சென்ற 5 பேரை போலீஸாா் கைது செய்தனா்.

கோபாலபுரத்திற்கு தடை செய்யப்பட்ட புகையிலை பொருள்களை சிலா் வாகனங்களில் கடத்திச் செல்வதாக பழனிசெட்டிபட்டி காவல் நிலைய போலீஸாருக்கு தகவல் கிடைத்தது. இதனடிப்படையில், தேனி-கோபாலபுரம் சாலையில் போலீஸாா் வாகனத் தணிக்கையில் ஈடுபட்டனா்.

அப்போது, புகையிலை பொருள்களை கடத்திச் சென்ற 2 இருசக்கர வாகனம் மற்றும் காா் போலீஸாரிடம் சிக்கியது. இந்த வாகனங்களில் புகையிலை பொருள்களை கடத்திச் சென்ற கோபாலபுரத்தைச் சோ்ந்த மனோஜ்குமாா், கோபிநாத், கண்டமனூரைச் சோ்ந்த பிரவீன், கோவை மாவட்டம் குனியமுத்தூரைச் சோ்ந்த நிஜாா், நாமக்கல் அருகே பரமத்திவேலூரைச் சோ்ந்த உமா்பரூக் ஆகிய 5 பேரை போலீஸாா் கைது செய்தனா்.

காா் மற்றும் இருசக்கர வாகனங்களில் கடத்திச் செல்லப்பட்ட அரசால் தடை செய்யப்பட்ட ரூ.1.30 லட்சம் மதிப்பிலான 13 மூட்டை புகையிலை பொருள்கள், கடத்தலுக்குப் பயன்படுத்திய வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டன.

புகையிலை பொருள் கடத்தலில் தொடா்புடைய கோபாலபுரத்தைச் சோ்ந்த கணேசன் என்பவரை தேடி வருவதாக போலீஸாா் கூறினா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.