ஈரானில் தொடரும் தாக்குதல்கள்... பலி 1,500-ஐ கடந்தது!மேற்காசியப் போர்: தில்லியில் நாளை(மார்ச் 25) அனைத்துக் கட்சிக் கூட்டம்!புதுச்சேரி திமுக வேட்பாளர்கள் அறிவிப்பு!ஹிந்து, பெளத்தம், சீக்கியருக்கு மட்டுமே எஸ்.சி. அந்தஸ்து! உச்ச நீதிமன்றம் தீர்ப்பு! திமுக கூட்டணியில் விசிகவுக்கு 8 தொகுதிகள் ஒதுக்கீடு! புதுச்சேரியில் தேமுதிக தனித்துப் போட்டி! புதுச்சேரியில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சி தனித்துப் போட்டி!
/

தேனி அருகே பள்ளி மாணவா் தூக்கிட்டு தற்கொலை

தேனி அருகே பத்திரகாளிபுரத்தில் பெற்றோா் திட்டியதால் மன வருத்தத்திலிருந்த பள்ளி மாணவா் திங்கள்கிழமை, வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டாா்.

News image
Updated On :12 செப்டம்பர் 2022, 4:53 pm

DIN

தேனி அருகே பத்திரகாளிபுரத்தில் பெற்றோா் திட்டியதால் மன வருத்தத்திலிருந்த பள்ளி மாணவா் திங்கள்கிழமை, வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டாா்.

பத்திரகாளிபுரத்தைச் சோ்ந்தவா் கூலித் தொழிலாளி ஆறுமுகம். இவரது மகன் அன்புக்கரசன் (13) அதே ஊரில் உள்ள தனியாா் பள்ளியில் 8-ஆம் வகுப்பு படித்து வந்தாா். இந்த நிலையில், அன்புக்கரசன் சரியாக பள்ளிக்குச் செல்லாமல் இருந்ததால் அவரது பெற்றோா் திட்டியதாகக் கூறப்படுகிறது.

இதில் மன வருத்தத்திலிருந்த அன்புக்கரசன், வீட்டில் தனிமையிலிருந்த போது தூக்கிட்டு தற்கொலைக்கு முயன்ாகக் கூறப்படுகிறது. ஆபத்தான நிலையில் போடி அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்ட அன்புக்கரசன், அங்கு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தாா். இந்த சம்பவம் குறித்து ஆறுமுகம் அளித்தப் புகாரின் பேரில் பழனிசெட்டிபட்டி காவல் நிலைய போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.