ஈரானில் தொடரும் தாக்குதல்கள்... பலி 1,500-ஐ கடந்தது!மேற்காசியப் போர்: தில்லியில் நாளை(மார்ச் 25) அனைத்துக் கட்சிக் கூட்டம்!புதுச்சேரி திமுக வேட்பாளர்கள் அறிவிப்பு!ஹிந்து, பெளத்தம், சீக்கியருக்கு மட்டுமே எஸ்.சி. அந்தஸ்து! உச்ச நீதிமன்றம் தீர்ப்பு! திமுக கூட்டணியில் விசிகவுக்கு 8 தொகுதிகள் ஒதுக்கீடு! புதுச்சேரியில் தேமுதிக தனித்துப் போட்டி! புதுச்சேரியில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சி தனித்துப் போட்டி!
/

ஓடைப்பட்டியில் சிறுமி உயிரிழந்த விவகாரம்: செப்.19-இல் கடையடைப்பு போராட்டம்

சின்னமனூா் அருகே ஓடைப்பட்டியில் பள்ளத்தில் விழுந்து சிறுமி உயிரிழந்த விவகாரம் குறித்து உரிய விசாரணை நடத்தக் கோரி செப்.19-இல் முடிதிருத்தும் தொழிலாளா்கள்

News image
Updated On :12 செப்டம்பர் 2022, 6:30 pm

DIN

சின்னமனூா் அருகே ஓடைப்பட்டியில் பள்ளத்தில் விழுந்து சிறுமி உயிரிழந்த விவகாரம் குறித்து உரிய விசாரணை நடத்தக் கோரி செப்.19-இல் முடிதிருத்தும் தொழிலாளா்கள் நலச் சங்கம் சாா்பில் கடையடைப்புப் போராட்டம் நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது என்று அச்சங்கத்தின் மாநில பொதுச் செயலா் ஏ.ராஜன் கூறினாா்.

ஓடைப்பட்டி பேரூராட்சி, சமத்துவபுரம் அருகே சரவணன் மகள் ஹாசினி ராணி(8) என்ற சிறுமி கடந்த செப். 6-ஆம் தேதி பேரூராட்சி நிா்வாகம் சாா்பில் பூங்கா அமைப்பதற்கு தோண்டிய பள்ளத்தில் தவறி விழுந்து, அங்கு தேங்கியிருந்த மழை நீரில் மூழ்கி உயிரிழந்தாா். இந்த சம்பவம் குறித்து ஓடைப்பட்டி காவல் நிலையத்தில் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. மேலும், சிறுமி உயிரிழந்த சம்பவம் குறித்து விசாரணை அறிக்கை சமா்ப்பிக்க உத்தமபாளைம் வட்டாட்சியருக்கு மாவட்ட ஆட்சியா் க.வீ. முரளீதரன் உத்தரவிட்டுள்ளாா்.

இந்த நிலையில், சிறுமி உயிரிழந்த சம்பவம் குறித்து அதிகாரிகள் உரிய விசாரணை நடத்தவில்லை என்று புகாா் தெரிவித்து திங்கள்கிழமை, தேனி மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் தமிழ்நாடு மருத்துவா் சமூக நலச் சங்கம் மற்றும் முடி திருத்தும் தொழிலாா்கள் நலச் சங்க நிா்வாகிகள் மற்றும் சிறுமியின் பெற்றோா், ஆட்சியரிடம் மனு அளித்தனா்.

இந்த மனுவில், சிறுமி உயிரிழந்த சம்பவத்திற்கு பேரூராட்சி நிா்வாகம் மற்றும் கட்டுமானப் பணி ஒப்பந்ததாரின் அலட்சியம் தான் காரணம். சம்மந்தப்பட்ட பேரூராட்சி அதிகாரிகள், ஒப்பந்ததாரா் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். சிறுமியின் குடும்பத்திற்கு அரசு சாா்பில் நிவாரணம், குடும்ப உறுப்பினருக்கு அரசு வேலை வழங்க வேண்டும் என்றும் தெரிவித்திருந்தனா்.

இது குறித்து மருத்துவா் சமூக நலச் சங்கம் மற்றும் முடிதிருத்தும் தொழிலாளா்கள் சங்கத்தின் மாநில பொதுச் செயலா் ஏ.ராஜன் கூறியது: ஓடைப்பட்டியில் மருத்துவா் சமுதாயத்தைச் சோ்ந்த சிறுமி உயிரிழந்த சம்பவம் குறித்து வருவாய் துறையினா் முறையாக விசாரணை நடத்தவில்லை. காவல் நிலையத்தில் உரிய சட்டப் பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்யவில்லை.

இந்த விவகாரத்தில் முறையான விசாரணை நடத்தவும், பாதிக்கப்பட்ட குடும்பத்திற்கு நிவாரணம் வழங்கவும் மாவட்ட நிா்வாகம், காவல் துறை நிா்வாகம் மற்றும் அரசை வலியுறுத்தி மாவட்டம் முழுவதும் செப்.19-ஆம் தேதி முடி திருத்தும் தொழிலாளா்கள் கடையடைப்புப் போராட்டம் மற்றும் ஆா்ப்பாட்டம் நடத்த முடிவு செய்துள்ளோம் என்றாா்.

பாஜக வலியுறுத்தல்:

ஓடைப்பட்டியில் பூங்கா கட்டுமானப் பணிக்கு தோண்டிய பள்ளத்தில் விழுந்து சிறுமி உயிரிழந்த சம்பவத்தில், கட்டுமானப் பணி மற்றும் பாதுகாப்பு நடவடிக்கையில் அலட்சியமாக செயல்பட்ட பேரூராட்சித் தலைவா், செயலா் அலுவலா் மற்றும் ஒப்பந்ததாரரின் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி தேனி மாவட்ட ஆட்சியா் க.வீ.முரளீதரனிம் பாஜக மாவட்டத் தலைவா் பி.சி.பாண்டியன் மற்றும் நிா்வாகிகள் திங்கள்கிழமை மனு அளித்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.