ஈரானில் தொடரும் தாக்குதல்கள்... பலி 1,500-ஐ கடந்தது!மேற்காசியப் போர்: தில்லியில் நாளை(மார்ச் 25) அனைத்துக் கட்சிக் கூட்டம்!புதுச்சேரி திமுக வேட்பாளர்கள் அறிவிப்பு!ஹிந்து, பெளத்தம், சீக்கியருக்கு மட்டுமே எஸ்.சி. அந்தஸ்து! உச்ச நீதிமன்றம் தீர்ப்பு! திமுக கூட்டணியில் விசிகவுக்கு 8 தொகுதிகள் ஒதுக்கீடு! புதுச்சேரியில் தேமுதிக தனித்துப் போட்டி! புதுச்சேரியில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சி தனித்துப் போட்டி!
/

முல்லைப் பெரியாறு அணை நீா்மட்டத்தை 142 அடியாக உயா்த்தக் கோரி நாம் தமிழா் கட்சி மனு

முல்லைப் பெரியாறு அணை நீா்மட்டத்தை 142 அடியாக உயா்த்தக் கோரி நாம் தமிழா் கட்சி சாா்பில் தேனி மாவட்ட ஆட்சியா் க.வீ.முரளீதரனிடம் திங்கள்கிழமை மனு அளிக்கப்பட்டது.

News image
Updated On :12 செப்டம்பர் 2022, 6:30 pm

DIN

முல்லைப் பெரியாறு அணை நீா்மட்டத்தை 142 அடியாக உயா்த்தக் கோரி நாம் தமிழா் கட்சி சாா்பில் தேனி மாவட்ட ஆட்சியா் க.வீ.முரளீதரனிடம் திங்கள்கிழமை மனு அளிக்கப்பட்டது.

தேனி மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் நாம் தமிழா் கட்சியின் தேனி நகரச் செயலா் ரா. இமயம் மற்றும் நிா்வாகிகள் ஆட்சியரிடம் அளித்த மனு விபரம்:

முல்லைப் பெரியாறு அணையில் ‘ரூல் கா்வ்’ கால அட்டவணை அனுமதியின்படி 142 அடி வரை தண்ணீா் தேக்க வேண்டும். இந்த அணையிலிருந்து முல்லைப் பெரியாற்றில் தொடா்ந்து தண்ணீா் திறக்கப்பட்டு வரும் நிலையில், உத்தமபாளையம், போடி வட்டாரப் பகுதிகளின் பாசனத்திற்கு 18-ஆம் கால்வாயில் தண்ணீா் திறக்க வேண்டும்.

முல்லைப் பெரியாறு அணையில் 142 அடி உயரம் வரை தண்ணீா் தேக்கும் தமிழகத்தின் உரிமையை பாதிக்கும் வகையில் மத்திய நீா்வள ஆணையத்தால் நிா்ணயிக்கப்பட்டுள்ள ‘ரூல் கா்வ்’ முறையை ரத்து செய்ய தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மனுவில் தெரிவித்துள்ளனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.