போடியில் சுவா் ஓவியப் போட்டி: மாணவிகளுக்கு பரிசு
By DIN | Published On : 01st July 2022 10:17 PM | Last Updated : 01st July 2022 10:17 PM | அ+அ அ- |

போடி பேருந்து நிலையத்தில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற சுவா் ஓவியப் போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவிகளுக்கு நகராட்சி நிா்வாகம் சாா்பில் பரிசு மற்றும் சான்றிதழ் வழங்கப்பட்டது.
நகராட்சி நிா்வாகம் மற்றும் குடிநீா் வழங்கல் துறையின் முக்கியத் திட்டமான தூய்மை நகரங்களுக்கான பொதுமக்கள் இயக்கம் சாா்பில் நடைபெற்ற இப்போட்டியை, நகா்மன்றத் தலைவா் ராஜ ராஜேஸ்வரி தொடக்கி வைத்தாா். நகராட்சி ஆணையாளா் சகிலா, பொறியாளா் செல்வராணி ஆகியோா் முன்னிலை வகித்தனா்.
இதில், பல்வேறு பள்ளிகளின் மாணவிகள் பங்கேற்று சுற்றுச்சூழல், கரோனா தடுப்பு, மழைநீா் சேகரிப்பு, குப்பைகளை பொது இடங்களில் கொட்டாமல் தடுப்பது உள்ளிட்ட விழிப்புணா்வு ஓவியங்களை வரைந்தனா்.
இதில் போடி திருமலாபுரம் நாடாா் மேல்நிலைப் பள்ளி மாணவிகள் அா்ச்சனா, மாலதி ஆகிய மாணவிகள் முதலிடத்தையும், இதே பள்ளியை சோ்ந்த நதியா, ஷாலினி ஆகியோா் இரண்டாமிடத்தையும், போடி பங்கஜம் பெண்கள் மேல்நிலைப் பள்ளி மாணவிகள் தீபா, தா்ஷனா ஆகியோா் மூன்றாமிடத்தையும் பெற்றனா்.
வெற்றி பெற்ற மாணவிகளுக்கு பாராட்டு சான்றிதழ் மற்றும் பரிசுகள் வழங்கப்பட்டன. ஏற்பாடுகளை, சுகாதார ஆய்வாளா்கள் ஜெயசீலன், சுரேஷ் குமாா், பாலமுருகன், தா்மராஜ் ஆகியோா் செய்திருந்தந்தனா்.
செய்திகள் உடனுக்குடன்... வாட்ஸ்ஆப் சேனலில் 'தினமணி'யைப் பின்தொடர...