கேரள வனத்துறையை கண்டித்து குமுளிக்கு செல்ல முயன்ற தமிழக விவசாயிகள் கைது

முல்லைப் பெரியாறு அணைக்கு பராமரிப்பு பொருட்களை கொண்டு செல்ல அனுமதி மறுத்த கேரளா வனத்துறையை கண்டித்து,
கேரள வனத்துறையை கண்டித்து குமுளிக்கு செல்ல முயன்ற தமிழக விவசாயிகள் கைது

கம்பம்: முல்லைப் பெரியாறு அணைக்கு பராமரிப்பு பொருட்களை கொண்டு செல்ல அனுமதி மறுத்த கேரளா வனத்துறையை கண்டித்து, குமுளியில் ஆர்ப்பாட்டம் செய்ய சென்ற விவசாயிகளை காவல் துறையினர் சனிக்கிழமை கைது செய்தனர்.

வெள்ளிக்கிழமை முல்லைப் பெரியாறு அணைக்கு பராமரிப்பு பணிகள் மற்றும் தேக்கடியில் உள்ள தமிழக பொதுப்பணித்துறை அலுவலகம், குடியிருப்பு, விருந்தினர் மாளிகை ஆகிய கட்டடங்களில் பராமரிப்பு பணிக்காக தளவாட பொருட்களை தமிழக பொதுப்பணித்துறை அதிகாரிகள் குமுளி வழியாக தேக்கடி கொண்டு சென்றனர்.

கேரள வனத்துறையினர் தளவாட பொருட்களை கொண்டு செல்ல அனுமதி தரவில்லை. பெரியாறு புலிகள் காப்பக இயக்குனரிடம் அனுமதி பெற்று வருமாறு தெரிவித்தனர்.

இதனால் அதிர்ச்சி அடைந்த தமிழக பொதுப்பணித்துறை அதிகாரிகள், இதுபற்றி தமிழக முதல்வர், பொதுப்பணித்துறை அமைச்சர் ஆகியோர்களுக்கு தகவல் தெரிவித்தனர். இந்த நிகழ்வு தமிழக விவசாயிகளிடையை பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.

இதன் எதிரொலியாக சனிக்கிழமை லோயர் கேம்பில் விவசாயிகள் கேரள வனத்துறை கண்டித்து குமுளியில் ஆர்ப்பாட்டம் செய்ய சென்றனர்.

அப்போது அவர்களை காவல் ஆய்வாளர் ஆர். லாவண்யா லோயர் கேம்ப்பிலேயே தடுத்து நிறுத்தினார்.

இதனால் விவசாயிகள் காவல் துறையினரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டு முழக்கமிட்டனர்.

அனுமதியின்றி ஆர்ப்பாட்டம் செய்ததாக பாரதிய கிசான் சங்கம் மாவட்டத் தலைவர் சதீஷ் பாபு, 5 மாவட்ட விவசாய சங்க நிர்வாகி எஸ்.ஆர். ரஞ்சித்குமார் உள்ளிட்ட 18 பேர்களை கைது செய்து தனியார் மண்டபத்தில் அடைத்தனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com