கம்பம் கெளமாரியம்மன் கோயிலில் சித்திரைத் திருவிழா

தேனி மாவட்டம் கம்பம் கெளமாரியம்மன் சித்திரைத் திருவிழாவில் கம்பம் மற்றும் சுற்று வட்டார பகுதிகளில் இருந்து ஆயிரக்கணக்கான ஆண், பெண் பக்தர்கள் கலந்து கொண்டனர்.
முத்தங்கி அலங்காரத்தில் கம்பம் கெளமாரியம்மன் பக்தர்களுக்கு அருள் பாலித்தார்.
முத்தங்கி அலங்காரத்தில் கம்பம் கெளமாரியம்மன் பக்தர்களுக்கு அருள் பாலித்தார்.

கம்பம்: தேனி மாவட்டம் கம்பம் கெளமாரியம்மன் சித்திரைத் திருவிழாவில் கம்பம் மற்றும் சுற்று வட்டார பகுதிகளில் இருந்து ஆயிரக்கணக்கான ஆண், பெண் பக்தர்கள் கலந்து கொண்டனர்.

தேனி மாவட்டம் கம்பம் கெளமாரியம்மன் சித்திரைத் திருவிழா கடந்த ஏப்ரல் 19 ம் தேதி தொடங்கி மே 10 வரை கொண்டாடப்படுகிறது.

செவ்வாய்க்கிழமை இரவு தொடங்கி புதன்கிழமை அதிகாலை முதலே பெண்கள் பொங்கல் வைத்தும், மாவிளக்கு எடுத்தும், அக்னி சட்டி, சக்தி கரகம் எடுத்து அம்மனுக்கு நேர்த்தி கடன்களை செலுத்தினர்.

அவில் கம்பம் மற்றும் சுற்று வட்டார பகுதிகளில் இருந்து ஆயிரக்கணக்கான ஆண், பெண் பக்தர்கள் கலந்து கொண்டனர். இன்று இரவு, கோடாங்கி பெரியசாமி வகையறா பி.வாசு பூக்குழி இறங்கும் நிகழ்வு நடைபெறுகிறது. வடக்கு தெற்கு காவல்துறையினர் பாதுகாப்பு செய்து வருகின்றனர்.

அன்னதானம், நீர் மோர் பந்தல் அமைத்து குடிநீர் விநியோகம் உள்ளிட்டவைகளை அனைத்து கட்சியினர், சமூக ஆர்வலர்கள் வழங்கினர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com