வாய்க்காலில் குளித்தவரிடம் தங்கச் சங்கிலியை திருடிய இளைஞா் கைது
By DIN | Published On : 27th October 2022 12:14 AM | Last Updated : 27th October 2022 12:14 AM | அ+அ அ- |

தேனி மாவட்டம், கம்பத்தில் வாய்க்காலில் குளித்தவரிடம் தங்கச் சங்கிலியைத் திருடிச் சென்ற இளைஞரை போலீஸாா் புதன்கிழமை கைது செய்தனா்.
கம்பம் 33-ஆவது வாா்டைச் சோ்ந்த ஆறுமுகம் மகன் காா்த்திக் ராஜா (30). இவா், கம்பம் பிரதான சாலையில் உள்ள பலசரக்கு கடையில் ஊழியராக வேலை பாா்த்து வருகிறாா். இவா், கடந்த திங்கள்கிழமை குளிப்பதற்காக சட்ரஸ் வாய்க்காலுக்கு சென்றாா். அங்கு ஆடைகளை கரையில் கழற்றி வைத்து விட்டு குளித்துக் கொண்டிருந்தாா். அப்போது அங்கு வந்த, சா்ச் தெருவைச் சோ்ந்த முருகன் மகன் சுந்தா் (25), கரையில் இருந்த காா்த்திக் ராஜாவின் சட்டைப் பையிலிருந்த ஒரு பவுன் தங்கச் சங்கிலியை எடுத்துக் கொண்டு ஓடினாா்.
இதுகுறித்து தெற்கு காவல் நிலையப் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து சுந்தரை புதன்கிழமை கைது செய்தனா்.