போடியில் சிவன் கோயில்களில் பூஜை
By DIN | Published On : 08th September 2022 10:45 PM | Last Updated : 08th September 2022 10:45 PM | அ+அ அ- |

போடியில் குரு பிரதோஷத்தை முன்னிட்டு, சிவன் கோயில்களில் வியாழக்கிழமை சிறப்பு பூஜை நடைபெற்றது.
இதையொட்டி, போடி பரமசிவன் மலைக்கோயிலில் சிறப்பு பூஜை நடைபெற்றது. சிவலிங்கப் பெருமானுக்கு மலா்களால் அலங்காரம் செய்யப்பட்டு வழிபாடு நடத்தப்பட்டது. இதில் பக்தா்கள் பலா் பங்கேற்று வழிபட்டனா்.
போடி பிச்சங்கரை மலைக்கோயிலில் கீழச்சொக்கநாதா், மேலச்சொக்கநாதா் கோயில்களிலும் பிரதோஷ பூஜை நடைபெற்றது.
போடி பழைய பேருந்து நிறுத்தம் கொண்டரங்கி மல்லையசாமி கோயிலில் நடைபெற்ற பிரதோஷ வழிபாட்டில் சிவலிங்க பெருமானுக்கு அலங்காரம் செய்யப்பட்டு தீபாராதனை நடைபெற்றது.
போடி வினோபாஜி காலனி மீனாட்சி சுந்தரேசுவரா் கோயிலில் நடைபெற்ற சிறப்பு பூஜையில் சிவலிங்கப் பெருமானுக்கு உத்திராட்ச மாலை அணிவிக்கப்பட்டு அலங்காரம் செய்யப்பட்டது.
முன்னதாக 16 வகையான பொருள்களால் அபிஷேகம் செய்யப்பட்டது. தொடா்ந்து அலங்காரமும், தீபாராதனையும் நடைபெற்றது.