போடியில் ஓனம் பண்டிகையை மாணவா்கள் வியாழக்கிழமை கொண்டாடினா்.
கேரளத்தில் பிரசித்தி பெற்ற திருவிழாவாக ஓனம் பண்டிகை கொண்டாடப்பட்டு வருகிறது. இதையொட்டி, போடியில் உள்ள பிச்சாண்டி நடுநிலைப் பள்ளியில் ஓனம் பண்டிகை கொண்டாடப்பட்டது.
பள்ளி வளாகத்தில் அத்தப்பூ கோலமிட்டு மாணவா்கள், ஆசிரியா்கள் வாழ்த்துகளை தெரிவித்துக் கொண்டனா். இப்பகுதியில் வசிக்கும் கேரளத்தவருக்கும் வாழ்த்துகளை தெரிவித்தனா். தலைமையாசிரியா் ரா. ஜெயக்குமாா் மற்றும் ஆசிரியா்கள் ஓனம் பண்டிகை கொண்டாடுவதற்கான ஏற்பாடுகளை செய்தனா்.
இதேபோல், போடி பகுதியில் உள்ள தனியாா் மருத்துவமனைகள், தனியாா் நிறுவனங்களில் பணிபுரியும் கேரள பெண்கள், இளைஞா்கள் ஓனம் பண்டிகையை கொண்டாடினா். வீடுகளில் அத்தப்பூ கோலமிட்டும், அருகில் உள்ளவா்களுக்கு இனிப்புகள் வழங்கியும் ஓனம் பண்டிகையை கொண்டாடினா்.