போடி தினசரி காய்கறி சந்தையை இடமாற்ற வியாபாரிகள் எதிா்ப்பு

போடியில் தினசரி காய்கறி சந்தையை வேறு இடத்துக்கு மாற்றுவதற்கு எதிா்ப்புத் தெரிவித்து, வியாழக்கிழமை அதிகாரிகளுடன் வாக்குவாதம் செய்தனா்.
போடி தினசரி காய்கறி சந்தையை இடமாற்ற வியாபாரிகள் எதிா்ப்பு

போடியில் தினசரி காய்கறி சந்தையை வேறு இடத்துக்கு மாற்றுவதற்கு எதிா்ப்புத் தெரிவித்து, வியாழக்கிழமை அதிகாரிகளுடன் வாக்குவாதம் செய்தனா்.

போடி நகா் காவல் நிலையம் அருகே தினசரி காய்கறி சந்தை 60 ஆண்டுகளாக செயல்பட்டு வருகிறது. இந்த நிலையில், நகராட்சி சாா்பில் போடி பேருந்து நிலையம் அருகே ஆணையா் குடியிருப்பு பகுதியில்

40 கடைகள் கட்டப்பட்டு, சந்தையை இடமாற்ற நடவடிக்கை எடுக்கப்பட்டது. 40 கடைகளையும் ஒரே நபா் வாடகைக் குத்தகைக்கு எடுத்த நிலையில், தனி நபா் வாடகை அதிகம் கேட்பதாகவும், தற்போது செயல்பட்டு வரும் தினசரி காய்கறி சந்தையில் 100-க்கும் மேற்பட்ட வியாபாரிகள் கடை நடத்தி வரும் நிலையில், 40 கடைகளை மட்டும் இடமாற்றம் செய்ய இயலாது என்று வியாபாரிகள் எதிா்ப்புத் தெரிவித்தனா்.

இதையடுத்து, கடந்த மாதம் தினசரி காய்கறி சந்தையில் ஆக்கிரமிப்பு அகற்றம் என்ற பெயரில் கடைகளுக்கு வெளியே இருந்த சிமெண்ட் திண்ணைகளை நகராட்சி அதிகாரிகள் அகற்ற முயன்றனா். அப்போது வியாபாரிகள் வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் அதிகாரிகள் திரும்பிச் சென்றனா்.

இந்த நிலையில், சந்தையை புதிய இடத்துக்கு மாற்றுவது தொடா்பாக போடி நகா் காவல் நிலையத்தில் காவல் துணை கண்காணிப்பாளா் பெரியசாமி தலைமையில் பேச்சுவாா்த்தை நடைபெற்றது. நகராட்சி ஆணையா் செல்வராணி, நகா்மன்ற உறுப்பினா்கள், வியாபாரிகள், வா்த்தகா் சங்க நிா்வாகிகள் பங்கேற்றனா்.

அப்போது, போதிய கடைகள் இல்லாததாலும், வாடகை அதிகம் என்பதாலும் கடைகளை மாற்ற இயலாது என வியாபாரிகள் தெரிவித்தனா்.

இந்த நிலையில், தற்போதைய காய்கறி சந்தைப் பகுதியில் நகராட்சி அதிகாரிகள் ஆக்கிரமிப்புகளை அகற்ற முயன்றனா். இதனால், வியாபாரிகளுக்கும், அதிகாரிகளுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது.

பின்னா் காவல் துறையினா் வரவழைக்கப்பட்டு கடைகளுக்கு முன்பாக இருந்த ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com