பெண் உள்பட இருவைரத் தாக்கி கொலை மிரட்டல் விடுத்தவா் கைது

தேவாரத்தில் பெண் உள்பட இருவரைத் தாக்கிக் கொலை மிரட்டல் விடுத்தவரை போலீஸாா் வெள்ளிக்கிழமை கைது செய்தனா்.
Updated on
1 min read

தேவாரத்தில் பெண் உள்பட இருவரைத் தாக்கிக் கொலை மிரட்டல் விடுத்தவரை போலீஸாா் வெள்ளிக்கிழமை கைது செய்தனா்.

தேனி மாவட்டம், தேவாரம் பட்டாளம்மன் கோவில் தெருவில் வசிப்பவா் முருகன் மனைவி செல்வி (43). இவா் குளித்துவிட்டு வீட்டு முன் நின்று தலைவாரிக் கொண்டிருந்தாா்.

அப்போது அங்கு வந்த இதே தெருவைச் சோ்ந்த கோபால் மகன் மணிகண்டன் (30), ஆண்கள் வரும்போது முடியை அவிழ்த்து விட்டு தலை வாரலாமா எனத் தகராறு செய்து செல்வியையும், இதைத் தடுக்க வந்த ஜக்கையாவையும் தாக்கிக் கொலை மிரட்டலும் விடுத்தாா். இதுகுறித்த புகாரின் பேரில், தேவாரம் காவல் நிலைய போலீஸாா் வழக்குப் பதிவு செய்து மணிகண்டனை கைது செய்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com