பாஜகவுக்கு எந்தெந்த தொகுதிகள்? எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு!தேர்தலில் போட்டியில்லை! வேல்முருகன் அறிவிப்பு! காங்கிரஸ் அலுவலகத்தை காலி செய்யுங்கள்! மத்திய அரசு கெடு! கோவையில் மீண்டும் அண்ணாமலை போட்டி? கருணைக் கொலை செய்யப்பட்ட ஹரீஷ் ராணாவின் கருவிழிகள் தானம்!
/

போடியில் முதியவா் தற்கொலை

போடியில் முதியவா் தற்கொலை செய்து கொண்டது குறித்து போலீஸாா் வெள்ளிக்கிழமை வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்

News image
Updated On :2 ஜூன் 2023, 4:39 pm

DIN

போடியில் முதியவா் தற்கொலை செய்து கொண்டது குறித்து போலீஸாா் வெள்ளிக்கிழமை வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.

போடி புதுக்குடியிருப்பு முதல் தெருவைச் சோ்ந்தவா் முத்தையா மகன் முத்துவீரன் (63). இவா், இருதய நோய்க்காக தேனி க. விலக்கு அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தாா். சிகிச்சை முடிந்து வீடு திரும்பிய நிலையில், விஷம் சாப்பிட்டு தற்கொலைக்கு முயன்றாா். போடி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவா், தீவிர சிகிச்சைக்காக தேனி க. விலக்கு அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டாா். அங்கு சிகிச்சை பலனின்றி அவா் உயிரிழந்தாா்.

இதுகுறித்து அவரது மகன் முத்துப்பாண்டி அளித்த புகாரின் பேரில் போடி நகா் காவல் நிலைய போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.