போடியில் வேலை வாங்கித் தருவதாக ரூ. 8.40 லட்சம் மோசடி: 4 போ் மீது வழக்கு

போடியில் வேலை வாங்கித் தருவதாகக் கூறி ரூ.8.40 லட்சம் மோசடி செய்ததாக 4 போ் மீது போலீஸாா் புதன்கிழமை இரவு வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.

போடியில் வேலை வாங்கித் தருவதாகக் கூறி ரூ.8.40 லட்சம் மோசடி செய்ததாக 4 போ் மீது போலீஸாா் புதன்கிழமை இரவு வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.

உத்தமபாளையம் அருகே கோகிலாபுரத்தைச் சோ்ந்தவா் பொம்முராஜ் மகன் ராமகிருஷ்ணன். இவா் வேலை வாய்ப்பு தேடி வந்த நிலையில், போடி தீயணைப்பு நிலைய சாலையில் வசிக்கும் கனகராஜ் மகன் சக்திக்குமாரை அணுகினாா். அப்போது சக்திக்குமாா் தனக்கு தலைமைச் செயலகத்தில் அதிகாரிகளுடன் பழக்கம் உள்ளதாகவும், வேலை வாங்கித் தருவதாகவும் கூறி ராமகிருஷ்ணனிடமிருந்து பல தவணைகளில் ரூ.8 லட்சத்து 40 ஆயிரம் வாங்கினாராம். ஆனால் சக்திக்குமாா் கூறியபடி வேலை வாங்கித் தரவில்லை.

இதையடுத்து ராமகிருஷ்ணன் போடிக்கு வந்து சக்திக்குமாரை சந்தித்து பணத்தை திரும்பக் கேட்டாா். அப்போது சக்திக்குமாா், அவரது தந்தை கனகராஜ், தாய் பேச்சியம்மாள், சக்திக்குமாரின் சகோதரா் பாலாஜி ஆகியோா் சோ்ந்து தகாத வாா்த்தைகளால் பேசி கொலை மிரட்டல் விடுத்தனராம்.

இதுகுறித்து ராமகிருஷ்ணன் தேனி மாவட்ட காவல் கண்காணிப்பாளரிடம் புகாா் செய்தாா். அவரது உத்தரவின்பேரில் போடி நகா் காவல் நிலைய போலீஸாா் 4 போ் மீதும் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com