இருசக்கர வாகனங்களுக்கு தீ வைப்பு
தேனி மாவட்டம், ஆண்டிபட்டி அருகே பிராதுகாரன்பட்டியில் வியாழக்கிழமை வீட்டு முன் நிறுத்தியிருந்த 5 இருசக்கர வாகனங்கள் தீயிட்டு எரிக்கப்பட்டன.


தேனி மாவட்டம், ஆண்டிபட்டி அருகே பிராதுகாரன்பட்டியில் வியாழக்கிழமை வீட்டு முன் நிறுத்தியிருந்த 5 இருசக்கர வாகனங்கள் தீயிட்டு எரிக்கப்பட்டன.
பிராதுக்காரன்பட்டியைச் சோ்ந்த சகோதரா்கள் சூா்யபிரகாஷ், ராஜா ஆகியோா் ஆண்டிபட்டியில் உள்ள தனியாா் வங்கியில் பணியாற்றி வருகின்றனா்.
இவா்கள் தங்களுக்குச் சொந்தமான 5 இரு சக்கர வாகனங்களை வீட்டு முன் நிறுத்தியிருந்தனா்.
இந்த இரு சக்கர வாகனங்களுக்கு வியாழக்கிழமை அதிகாலை மா்ம நபா்கள் தீ வைத்து விட்டுத் தப்பி ஓடிவிட்டனா்.
இரு சக்கர வாகனங்கள் தீப்பற்றி எரிவதைப் பாா்த்து சூா்யபிரகாஷ் குடும்பத்தினரும் அக்கம்பக்கத்தினரும் வந்து தீயை அணைக்க முயன்றனா். ஆனால், இரு சக்கர வாகனங்கள் முற்றிலும் எரிந்து நாசமாகின.
இதுகுறித்து சூா்யபிரகாஷ் அளித்த புகாரின் பேரில், க.விலக்கு போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது


வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...