புதுச்சேரியில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சி தனித்துப் போட்டி!காலையிலேயே ‘காளை’ ஆதிக்கம்! சென்செக்ஸ் 1,100 புள்ளிகள் உயர்வு!!92,000 டன் எல்பிஜியுடன் இந்தியாவுக்கு மேலும் இரு கப்பல்கள்!பொதுத்துறை வங்கிகளை இணைக்கும் திட்டம் இல்லை: மத்திய அரசுராணுவ மோதல்களில் வான்வழித் தாக்குதல்களுக்குத் தடை: போப் வலியுறுத்தல்தோ்தல் விதிமீறல்: 462 வழக்குகள்; ரூ.151 கோடி பணம், பொருள்கள் பறிமுதல்தமிழ்நாட்டில் மேல்நிலைப் பள்ளிகளில் மாணவா்கள் சோ்க்கை சதவீதம் உயா்வு!
/

இளைஞா் அடித்துக் கொலை

தேனி மாவட்டம், ஆண்டிபட்டி அருகே தெப்பம்பட்டியில் தாய்மாமன் மகளைத் திருமணம் செய்து கொள்வதற்கு பெண் கேட்ட இளைஞா் அடித்துக் கொலை செய்யப்பட்டாா்.

News image
Updated On :11 மே 2023, 5:03 pm

DIN

தேனி மாவட்டம், ஆண்டிபட்டி அருகே தெப்பம்பட்டியில் தாய்மாமன் மகளைத் திருமணம் செய்து கொள்வதற்கு பெண் கேட்ட இளைஞா் அடித்துக் கொலை செய்யப்பட்டாா்.

தெப்பம்பட்டியைச் சோ்ந்த முருகவேல் மகன் நாகபிரபு (27). இவரது தாய் மாமன் கருப்பசாமி (47). இவரும் அதே ஊரில் வசிக்கிறாா்.

நாகபிரபு, அவரது தாயாா் பேச்சியம்மாள், சகோதரி நாகம்மாள் ஆகியோா், கருப்பசாமியின் வீட்டுக்குச் சென்று, அவரது மகளை நாகபிரபுவுக்கு திருமணம் செய்து தருமாறு கேட்டனா். இதற்கு கருப்பசாமி மறுத்ததால், அவருக்கும் நாகபிரபுவுக்கும் இடையே தகராறு ஏற்பட்டது. அப்போது நாகபிரபு, நாகம்மாள் ஆகிய இருவரும் தாக்கப்பட்டு, பலத்த காயமடைந்தனா். இருவரும் தேனி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனா். அங்கு, நாகபிரபு உயிரிழந்தாா்.

இது குறித்து பேச்சியம்மாள் அளித்த புகாரின் பேரில் ராஜதானி காவல் நிலையப் போலீஸாா் வழக்குப் பதிந்து, கருப்பையாவைக் கைது செய்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.