

கம்பம்: கம்பத்தில் காந்தி சிலையின் கை உடைக்கப்பட்டதை கண்டித்து அனைத்துக் கட்சியினர் புதன்கிழமை உண்ணாவிரதப் போராட்டத்தை தொடங்கினர்.
தேனி மாவட்டம் கம்பத்தில் மகாத்மா காந்தி சிலை உள்ளது. சிலையின் வலது கையில் புத்தகம் ஒன்றை பிடித்து நிற்பது போல் இருக்கும். இந்நிலையில், புதன்கிழமை காலை காந்தி சிலையின் வலது கை உடைக்கப்பட்டிருந்ததை பார்த்த மக்கள் அதிர்ச்சியடைந்தனர். உடைக்கப்பட்ட கையின் பாகமும், புத்தகத்தையும் காணவில்லை.
இதுபற்றி தெற்கு காவல் நிலையத்தில் நகர காங்கிரஸ் தலைவர் கே.சி.போஸ் புகார் செய்தார். ஆய்வாளர் ஆர்.லாவண்யா அருகே உள்ள கண்காணிப்பு கேமராக்களை ஆய்வு செய்து வருகிறார்.
இந்த நிலையில் அனைத்து கட்சியினரும் காந்தி சிலை அருகில் காலவரையற்ற உண்ணாவிரதத்தை தொடங்கினர். குற்றவாளிகளை கைது செய்யக் கோரி முழக்கமிட்டனர்.
இந்த நிகழ்வு கம்பம் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்திதை தொடர்ந்து போலீஸார் குவிக்கப்பட்டுள்ளனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.