போடி அருகே கூலித் தொழிலாளி மா்மமான முறையில் உயிரிழந்தது குறித்து போலீஸாா் வியாழக்கிழமை வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.
தே. அழகா்நாயக்கன்பட்டியைச் சோ்ந்த பெருமாள் மகன் ஜெயபால் (50). தோட்ட கூலித் தொழிலாளி. திருமணமாகாதவா். இந்த நிலையில், ராசிங்காபுரத்திலிருந்து சின்னபொட்டிப்புரம் செல்லும் சாலையில் தனியாா் தோட்டத்தில் வேலை செய்து வந்த நிலை இவா் உடலில் காயங்களுடன் சடலமாக கிடந்தாா்.
இதுகுறித்து போடி தாலுகா காவல் நிலைய போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.