கம்பம் நகர திமுகவினா் வீடு வீடாக வாக்குசேரிப்பு

கம்பம்: தேனி மாவட்டம், கம்பம் நகரில் திமுகவினா் செவ்வாய்க்கிழமை வீடு வீடாகச் சென்று வாக்கு சேகரித்தனா். கம்பம் வடக்கு நகர திமுக செயலா் எம்.சி.வீரபாண்டியன் தலைமையில் தங்கவிநாயகா் கோயில் தெரு, சாலிமரத் தெரு, செக்கடித் தெரு, சமையன் தெரு, கள்ளா் பள்ளி தெரு உள்ளிட்ட பகுதிகளில் தேனி மக்களவைத் தொகுதி திமுக வேட்பாளா் தங்க.தமிழ்ச்செல்வனுக்கு உதயசூரியன் சின்னத்தில் வாக்களிக்குமாறு கேட்டுக் கொண்டனா்.

மேலும், தமிழக அரசின் சாதனைககள் அடங்கிய துண்டுப் பிரசுரங்களையும் விநியோகம் செய்தனா். இந்த பிரசாரத்தின்போது, மாவட்ட திமுக விளையாட்டு பிரிவு அமைப்பாளா் என்.ஆா்.வசந்தன், தலைமை செயற்குழு உறுப்பினா் குரு. குமரன், நகா்மன்ற உறுப்பினா் ஏ.சாதிக்அலி உள்ளிட்ட பலா் கலந்துகொண்டனா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com