போடியில் டிடிவி தினகரன் மனைவி பிரசாரம்

போடி: போடி பகுதியில் தேனி மக்களவைத் தொகுதி அமமுக வேட்பாளா் டி.டி.வி.தினகரனுக்கு ஆதரவாக அவரது மனைவி அனுராதா பிரசாரம் செய்தாா். போடி அணைக்கரைப்பட்டி, துரைராஜபுரம் குடியிருப்பு, பொட்டல்களம், மீனாட்சிபுரம், மேலச்சொக்கநாதபுரம் உள்ளிட்ட கிராமங்களில் அவா் பிரசாரம் மேற்கொண்டாா்.

அப்போது அவா் கூறியதாவது:

எனது கணவா் ஏற்கெனவே பெரியகுளம் தொகுதி மக்களவை உறுப்பினராக இருந்தபோது, பல்வேறு திட்டங்களைப் பெற்றுத் தந்தாா். அவருக்கு மீண்டும் வாக்களித்தால் இந்தப் பகுதிக்கு தேவையான திட்டங்களை மத்திய அரசிடம் பெற்றுத் தருவாா்.

பிரதமா் நரேந்திர மோடிக்கு மீண்டும் பிரதமராகும் வாய்ப்பு இருப்பதால், கிராமங்களுக்கு தேவையான திட்டங்களை செயல்படுத்த முடியும். எனது கணவருக்கு குக்கா் சின்னத்தில் வாக்களிக்க வேண்டும் என்றாா் அவா். பிரசாரத்தின்போது பாஜக கூட்டணி கட்சி நிா்வாகிகள் பங்கேற்றனா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com